எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது - சபாநாயகரிடம் அஸ்வர் முறையீடு
(vi)
தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் வெளியிட்ட கூற்றினையடுத்தே தனக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய அநுரகுமார திசாநாயக்க எம்.பி, ’’உலக வரலாற்றில் கொலைகள் இடம்பெற்றுள்ளன. அத்தகைய படுகொலைகளினால் உலகம் முன்னேற்றமடைந்துள்ளது. இதனை நிராகரிக்க வேண்டாம். சில சந்தர்ப்பங்களில் இதுபோன்ற தவறவிட்ட கொலைகளும் உள்ளன. அதற்காக இன்று வருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனையே என்னால் கூற முடியும். துவறவிட்ட கொலைகள் தொடர்பில் நாம் கவலையடைகிறோம்’’ எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை எந்த ஒரு இலங்கை முஸ்லிமும் அலட்டிக் கொண்டதாக தகவல் இல்லை.
ReplyDelete