சுதந்திர பலஸ்தீன் மலர்ந்தால்..! இஸ்ரேல் வஞ்சக திட்டம் தயாரிப்பு
(TN)
பலஸ்தீனுக்கு தனிநாடு அந்தஸ்தை கோரி மஹ்மூத் அப்பாஸ் ஐ.நா பொதுச்சபைக்கு சென்றால் அவரை பலஸ்தீன நீர்வாகத்தின் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான பரிந்துரையை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு முன்வைத்துள்ளது.
அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “மஹ்மூத் அப்பாஸ் பலஸ்தீன தனிநாட்டுக்கு பொதுச் சபைக்கு சென்றால் அவரை பலஸ்தீன நிர்வாகத்தின் தலைமை பதவியில் இருந்து வெளியேற்றுவதை தவிர வேறு வழியில்லை. அதற்கான பரிந்துரை புதன்கிழமை வெளியிடப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி பரிந்துரையை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கவிக்டொர் வைப்ரமன், பலஸ்தீனின் ஐ.நா. உறுப்புரிமை கோரிக்கை தொடர்பாக பதிலளிக்கும் இஸ்ரேல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல், அமெரிக்காவின் எதிர்ப்பை தாண்டி பலஸ்தீன நிர்வாகம் ஐ.நாவிடம் சென்றால் அதன் மீது பல தடைகள் விதிக்கப்படும் என்பதோடு இதன்மூலம் பலஸ்தீன நிர்வாக உடைந்துவிடும் என்பது உறுதியானது என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு எச்சரித்துள்ளது.
பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி ஐ.நாவின் பார்வையாளர் அந்தஸ்திற்காக விண்ணப்பிக்கவுள்ளார். பார்வையாளர் அந்தஸ்துக்கு பொதுச் சபையில் பெரும்பான்மை மாத்திரம் இருந்தால் போதும் என்பதால் பலஸ்தீன் அதனை இலகுவாக வென்றுவிடும் என்பது உறுதியாகியுள்ளது. ஐ.நா. பார்வையாளர் அந்தஸ்த்தைப் பெறும் பட்சத்தில் பலஸ்தீன், இஸ்ரேல் அரசுக்கு எதிராக மேற்கொள்ளும் முறைப்பாட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment