உலகிலேயே மிக ஏழ்மையான ஜனாதிபதி
உலகிலேயே மிக ஏழ்மையான அதிபர் உருகுவே நாட்டை சேர்ந்த ஜோஸ் முஜிகாதான் என்று கூறப்படுகிறது. இவர் தனது வருமானத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைக்கு வழங்கி விடுகிறார்.
தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டின் அதிபராக இருப்பவர் ஜோஸ் முஜிகா (77). இவர்தான் உலகிலேயே மிக ஏழையான அதிபர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தலைநகர் மான்ட்விடியோவில் வசிக்காமல், பல மைல் தொலைவில் உள்ள சிறிய பண்ணை வீட்டில்தான் இவர் வசிக்கிறார். அந்த பண்ணை வீடுகூட ஆடம்பரமானது அல்ல. மிகவும் சிதிலமடைந்த கட்டிடம். இவருக்கு சம்பளம் சுமார் ரூ.6.96 லட்சம். அதில், 90 சதவீதத்துக்கும் மேல், அதாவது ரூ.6.5 லட்சத்தை அறக்கட்டளைக்கு வழங்கி விட்டு, மீதி தொகை ரூ.43 ஆயிரத்தில் மட்டுமே வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
அதிபர் பதவிக்கே உரிய சில ஆடம்பரமான வசதிகளுடன் வாழ எவ்வளவோ எடுத்து சொல்லியும் ஏற்க மறுத்து விட்டார். தன் வாழ்க்கை முறையை அவர் சிறிதுகூட மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. இவர் வீட்டில் 2 போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்கு நிற்கின்றனர். அவர்களை பார்த்துதான், அதிபர் என்று ஊகித்து கொள்ள முடியும். மிக பழைய வோக்ஸ்வேகன் பீட்டில் கார், செல்ல நாய் ஒன்றுதான் இவருடைய அரிய சொத்துக்கள். கிணற்று நீரைதான் பயன்படுத்தி வருகிறார். இதனால் மிக எளிமையாக வாழ்க்கை நடத்தி வரும் ஜோஸ் முஜிகோ உலகின் மிக ஏழையான அதிபர் என்று கூறுகின்றனர்.
ஏழ்மையான(பணத்தின்,வாழ்வின் அடிப்படையில்) ஜனாதிபதியாக இருக்கலாம்.ஆனால் எல்லோர் உள்ளங்களிலும்
ReplyDeleteஉயர்ந்து விளங்குகிறார்.அந்தக் காலத்தில் ஒரு சில நாடுகளை ஆண்ட இஸ்லாமிய சகாபாக்களை ஞாபக மூட்டுகிறார்.