Header Ads



மூவர் வெட்டிக்கொலை - மேலும் இரு சடலங்கள் மீட்பு


தென்னிலங்கையின் புளத்சிங்கள பகுதியில் இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணிப் பிரச்சினை தொடர்பிலேயே இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள், 95 வயது முதியவர், 85 வயது வயோதிப பெண்மணி, அவர்களின் மகனான 65 வயதானவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கிரியெல்ல, முதுன்கொடுவப் பகுதியில் எரிவடைந்த வீடு ஒன்றிலிருந்து 32 வயதான தாயினதும் அவரது 7 வயதான மகனினதும் இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவேறு சம்பவங்கள் தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தென்னிலங்கையில் நாள்தோறும் இவ்வாறான கொலைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.