புத்தளமும், மரைக்கார்களும்..!
(S.M.Isham)
புத்தளம் மரைக்கார் மார்கள் - (அப்பலோ கட்டப்பட்ட இடத்தில் இருந்த வீட்டில் பிறந்த மரைக்கார் மார்கள்)
01 - புத்தள மரைக்கார்
இவர் மிகவும் இளகிய மனம் கொண்டவர் எந்த அளவுக்கு என்றால் வருடைய தோட்டக்காரர் கூட "டேய் மரைக்கா" என்று தான் கூப்பிடுவாராம், தோட்டக்காரர் காசு கேட்டார் உடனே கொடுத்தான் விடுவாராம், பயத்தால் அல்ல அவருடைய கருணைக்கு அளவே இல்லை என்பதால்.
02 - மம்பட்டி மரைக்கார்
இவர் அவருடைய தோட்டக்கார்களோடு பெரிதாக கதைப்பது கிடையாது ஆனால் கொடுத்த வாக்கை தவறாது நிறைவேற்றும் ஒருவர் , இவர் ஒருநாள் தோட்டத்தில் வேலை செய்வோரிடம் எதோ ஒரு வேலையை சொல்லி சொல்லி அது நெடு நாட்களாக நடக்க வில்லையாம், உடனடியாக அவர் இன்று இதனை நடத்தி முடிக்க வேண்டும் என்று அதிரடி வேளையில் அவசரமாக வேலை செய்ய சொன்னபோது ஒருவர் மட்டும் ஏதோ முனக்கத்தோடு வேலை செய்ய மறைக்காவுக்கு கோவம் வந்துட்டு "ஒரே அடி மம்பட்டியாலே". அந்த தோட்டக்காரர் இறந்ததும் தான் அவருக்கு வந்த பெயர் இந்த பெயராம்.
03 - புது வீட்டு மரைக்கார்
இவர் புது வீட்டுக்கு வரும் போது பிறந்தவராம், அதனாலே இவருக்கு புது வீட்டு மரைக்கார் என பெயர் வந்தது. இவர் வீதியிலே போனால் எல்லோரும் பார்ப்பார்களாம். அந்த காலத்தில் வெள்ளை சட்டையும், வெட்டியும், உள்ளே போட்டிருக்கும் பெனியன் விளங்கும் அளவு ஒரு பட்டு சட்டையும், அந்த பட்டு சட்டையின் பயில் 100 ரூபாக்களும் வைத்து கம்பீரமாய் நடந்து செல்வாராம். புத்தள கன்னிகள் பார்வை முழுக்கு இவர் வசமாம்.
04 - செல்ல மரைக்கார்
இவருக்கு சரியான செல்லமாம், இவரது வேலைகள் எல்லோரையும் சிரிக்க வைப்பதாவே அமையுமாம். மறைக்க மார்கள் பாவிக்கும் பெறுமதியான இந்தியாவில் இருந்து கொண்டு வரும் கைக்கம்பு இவருக்கு நாய்க்கு கரைச்சல் கொடுக்கும் கம்பாகவும் இருந்து இருக்கிறது. ஒரு நாள் இப்படித்தான் ஒரு நாய்க்கு யாரும் இல்லாத நேரம் அந்த கம்பால் அடித்து றுகிறார், நாய் கம்பை கவ்விக்கொண்டு போய் விட்டது. வெட்கத்தை விட்டு வீட்டில் வேலை செய்த சுல்தான் அப்பாவிடம் சொல்லி நாயை தேடி பிடித்து கம்பை எடுத்தாரா. வீடு முழுக்க சிருப்ப்தானாம் அன்று.
இவர் ஏதாவது முக்கியமான கூட்டங்களுக்கு சென்றாலும் சரி நண்பர்களுடன் பேசினாலும் சரி எங்கு கதவு இருக்கிறது அதன் அருகில் போய் இருந்து விடுவாராம். எல்லோரும் முக்கியமாக பேசும் போது அவர் அந்த அதவை வேகமாக தள்ளி விட்டு ஐவரும் ஏதோ அந்த கூட்டத்தில் கேட்பது போல இருந்து விடுவாராம். வேகமாக தள்ளிய அந்த கதவு சடார் என்று அடித்ததும் கதைத்துக்கொண்டு இருந்த அனைவரும் பயந்து எலும்புவார்கலாம் அதை பார்த்து இவர் சிரிப்பாராம். ஆனால் இவர் எல்லோராலும் மதிக்கப்பட்ட எல்லோருக்கும் பழக்கமான ஒருவராம். பொதுவாக சிறுவர்களுக்கு பிடித்த மறைக்க இவ்வோதானா.
மரைக்கார்கள் பண்டைய புத்தளம் பண்பாட்டின் மரபின் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்துள்ளனர். அவர்களது செல்வாக்கு தமிழகம், கேரளா வரை இருந்துள்ளது. அவர்களது சொல்லுக்கு கட்டுப்பட்டு தமது தயாரிப்புகளில் By appointment of ‘’’’’’’’’ Marikkar of Puttalam – Ceylon என்று பொறிப்பதற்கு பிரபல ஐரோப்பிய நிறுவனங்கள் காத்திருந்த வரலாறு உள்ளது.
ReplyDeleteமரைக்கார் வீடு என சமீப காலம் வரை அறியப்பட்டு இன்று ஒரு குட்டிச் சுவர்கூட மிச்சமின்றி இருக்கும் அரண்மனை வீடு லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையின் Backyard View ஐ அடிப்படையாகக் கொண்டு Architectural Design தயாரிக்கப்பட்டு கட்டப்பட்டது என மூத்தோர் கூறக் கேள்விப்பட்டுள்ளேன். புத்தளத்தின் பள் ளிகள், பாடசாலைகள், பொது நிறுவனங்கள், பசார் எல்லாவற்றினதும் உரித்தாளிகள் அவர்கள் தான். அவர்களது வாரிசுகள் இன்னும் வாழ்கின்றனர்.
மரைக்கார்கள், அவர்களது வாழ்வும் வீழ்ச்சியும், அவர்கள் கைவரப் பெற்றிருந்த எண்ணிலடங்காத பெரும் செல்வம் அவை புத்தளம் மக்களின் வாழ்வியலில் எற்படுத்திய தாக்கங்கள் என்பன முறையாக அமைந்த ஒரு நீண்ட ஆய்வுக்குரியவை. எதிர்காலத்தை நோக்கிய புத்தளத்தின் சந்ததிகளது கனவுகளை வடிவமைப்பதில், நிதரிசனப் படுத்துவதில் ஒரு தீர்மானகரமான பங்கு அதற்கு உண்டு.
இவ்வாறு நீண்ட ஒரு பாரம்பரியத்தையும் வாழ்வியலையும் வெறுமனே ஓரிரண்டு மரைக்கார்களின் கிறுக்குத் தனத்தையும் அபத்தமான நடவடிக்கைகளையும் பதிவிட்டதன் மூலம் ஜப்னா முஸ்லிம் சிறுமைப்படுத்தி விட்டது.
சரியாகச் சொன்னீர்கள் ரெஜி .. இது அவசியமற்ற பதிவு...கப்பல் கட்டி திரை கடலோடி திரவியம் தேடி போர்சுகிசீயர்களுக்கும் டச்சுகாரர்களுக்கும் வியாபாரத்தில் போட்டியாகவும் அவர்களின் மதமாற்றத்திகு சிம்ம சொப்பனமாக இருந்த மரைக்காயர்களின் வாழ்வு சரித்திரத்தில் மறைக்க முடியாத வாழ்வு
ReplyDelete௦௧ - உங்களது சொந்த பெயர்களில் வாருங்கள் இல்லை சொல்லிவிட்டு கருத்து தெரிவியுங்கள். தற்போதைய இளைஞர்கள் அவர்களுடைய மூதாதயர்களின் கதைகளை கேட்பதை விட்டு விட்டு வேறு ஏதோ தேவை இல்லாத கதைகளை தான் கீடுக்கொண்டுகேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆசையூட்டுவதை அடிப்படையாக கொண்டே இந்த விடயமா பகிரப்பட்டது. இன்னும் பகிரப்படவேண்டிய விடயம் பல இருக்கின்றது ஆனால் இளைஞர்களை ஆசையூட்ட இது போன்ற உண்மையான சுவாரசியமான விடயங்கள் தான் பொருத்தமானது. மரைக்கார் மார்களை பற்றி நான் இங்கு எதுவும் கீழ்த்தரமாக கூற வில்லை, அவர்கள் மக்களோடு பழகிய முறைகளையும், அவர்களின் வாழ்வில் நடந்தவையையுமே கூறி இருக்கிறேன்.
ReplyDeleteதவறிருந்தால் மன்னியுங்கள், உங்கள் குழந்தைகளையும் தத்தமது குடும்ப வரலாறுகளை படிக்க சொல்லுங்கள், ஆதலே நிறைய படிப்பினைகள் இருக்கின்றது