பாராளுமன்ற குழுவின் கோரிக்கையை ஏற்கமறுத்த ஷிராணி - சலூட் அடிக்க மறுத்த பொலிஸார்
(tm)பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பிரேரணையை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வு டிசெம்பர் 04ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முதலாவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 10.40 மணிக்கு ஆரம்பமானது. அந்த தெரிவுக்குழு முன்னிலையில் பிரதம நீதியரசர் முற்பகல் 11.21 மணியளவில் ஆஜரானார்.
சட்டவுரைஞர்கள் இன்றி ஆஜராகுமாறு முதலில் பிரதம நீதியரசருக்கு தெரிவுக்குழுவினால் பணிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதனையடுத்து சற்று நேரத்திற்கு பின்னர் பிரதம நீதியரசர் சட்டவுரைஞர்களுடன் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜரானார்.
பிரதம நீதியரசருக்கு தமது தரப்பு எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கிய தெரிவுக்குழு அதன் அடுத்த அமர்வை டிசெம்பர் 04ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.
இதேவேளை பிரதம நீதியரசர் தொடர்பான குற்றப் பிரேரணைக்கு எதிரான மனுக்களின் தீர்ப்பு வரும் வரை பிரதம நீதியரசர் தொடர்பான குற்றங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, அதன் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை பரிந்துரை செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதமர் நீதியசர் ஷிராணிபண்டார நாயக்க எவ்விதமான பாதுகாப்பும் இன்றி நாடாளுமன்றத்திற்கு நேற்று வருகைதந்தபோது நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயில் கடமையில் இருந்த பொலிஸார் அவருக்கு எவ்விதமான மரியாதையும் செலுத்தவில்லை. பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதிபதிகள்,நீதவான்கள் செல்கையில் கடமையில் இருக்கும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.
What you did for Sarath Fonseka has repeated to you. Fedrica Janz also has ran away from the country with her children. This is called Allah's punishment. Others should be aware of their own sins.
ReplyDelete