இலங்கையில் முதலாம் திகதி சர்வதேச எயிட்ஸ் தினம் அனுஷ்டிப்பு...!
(எம்.எம்.ஏ. ஸமட்)
எதிர்வரும் சனிக்கிழமை (01) உலகளாவிய ரிதியில் அனுஷ்டிக்கப்படும் உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு எயிட்ஸ் தொடர்பான தேசிய நிகழ்வு நாளை (30)ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு 7இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் சுகாதார அமைச்சர் மகித்திரிபால சிறிசேன தலைமையில் நடபெறவுள்ளதாக பாலுறவு மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டப் பணிப்பாளர் டாக்டர் நிமால் எதிரிசிங்க தெரிவித்தார்.
உலக எயிட்ஸ் தினம் 1988ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி உலக எயிடஸ் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 24ஆவது வருடமாக அனுஷ்டிக்கப்படும் உலக எயிட்ஸ் தினத்தின் இவ்வாண்டுக்கான கருப்பொருளாக எயிட்ஸ் தொற்றைப் பூச்சிமாக்குதல் மற்றும் எயிட்ஸுடன் கூடிய மரணத்தைப் பூச்சியமாக்குதல் ஆகியவையாகும்.
இலங்கையில் எயிடஸ் தடுப்பு வேலைத்திட்டமானது உள்ளுர் மற்றும் சர்வதேச தன்னார்வு தொண்று நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் எயி;ட்ஸ் தடுப்புத் திட்டமானது வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment