Header Ads



வட்டிலப்பமும், ஈச்சம்பழமும்..!


(மின்ஹாஜ் - வயம்ப பல்கலைக்கழகம்)

மூன்று தசாப்தகால  யுத்தத்தின் பின் அமைதியாக வாழ்கிறோம்.எல்லாப்புகழும் இறைவனுக்கே! இந்த அமைதியான சூழல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும்  ஆசைபடுகிறோம்.

ஆனால் இன்னும் சில நாட்களில் இந்த அமைதி குலைந்து போகலாம்.பெரும் பான்மை சமூகத்தால் அல்லது சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் நிலவும் கருத்து வேற்றுமைகளால் இந்த பிளவு மீண்டும் தலைதூக்க முடியும். ஆனாலும் நம்மில் சிலர் வட்டிலப்பமும் ஈச்சம்பழமும் கொடுத்து நிலைமையை சீர்செய்ய நினைகிறார்கள்.

அதற்கிடையில் என்ன செய்ய வேண்டும் என்பதை விட நாங்கள் எப்பொழுதும் செய்துகொண்டே இருந்திருக்க வேண்டிய, செய்துகொண்டே  இறுக்க வேண்டிய விடயம் ஒன்று மறக்கடிக்கப்பட்டுள்ளது.அதை செய்யாமல் காயங்களுக்கு ஒத்தடம் போடுவதன் மூலம் மாத்திரம்  நோயை குணப்படுத் தமுடியுமா?

என்ன  அந்த பணி? இது எதை அடிப்படையாக கொண்டு கட்டியெழுப்பப்பட வேண்டும். இந்த பணி  சரியாக செய்யப்படுமிடத்து என்ன கிடைக்கும்.அந்த பணிதான் என்ன? அரசியலா? இஸ்லாவா? சமூக சேவையா? சமூக நல்லிணக்கமா?அழைப்பு பணியா?அபிவிருத்திப்  பணியா? கல்விமேண்பாடா? பொருளதார அபிவிருத்தியா? ஊடகத்துறையா?இதில் எதை முதலில் முன்னுரிமை படுத்தவேண்டும்? என்ற கேள்விக்கு இடம் இல்லாமல் இது அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பணியாக அந்த புனித பணி அமைய வேண்டும்.இல்லாதவிடத்து ஓட்டை உடைசலுக்கு பெச் போட்ட கதையாகிவிடும்.

இந்த பணி புதிதாக   இருப்பதால் ஒரு  புதிய பெயரை சூட்டதேவையில்லை. இது இலங்கை வரலாற்றில் புதியதாக பார்க்கப்படலாம் ஆனாலும் எல்லோருக்கும் நன்மை அளிக்கும் பணி. மனிதர்கள் என்ற வகையில் அனைத்து சமூகங்களும் அமைதியாக வாழும்.எனவே இப்பணிக்காய் ஒன்றிணைவோம்.எமது கரங்களை ஒன்றுசேர்போம்.இந்த உலகிலும் மறுமையிலும் நின்மதியாக வாழ இள இரத்தங்கள்   வீருகொண்டு எழும்பிவிட்டது  கிழக்கு வானில் இருந்து மேற்கு கரை வரை. இந்த உலகில் நின்மதியை தொலைத்த சமூகங்களுக்கு இருமடங்கான நின்மதியை இரு உலகிலும்  காட்டுவோம் .அல்லாஹுஅக்பர்.

அதற்கிடையில் எங்களோடு ஒன்றாக வாழ்ந்து ஒரே மொழியை பேசிய நண்பர்களே என்னையும் எனது உறவுகளையும் அடித்து துரத்தியது  மட்டுமல்லாமல் புலிப்பாசிச வேட்டையும் ஆடி சியோனிசத்தை உற்ற நண்பனாக்கினர்.சியோனிசமும் புட்டிசமும் கைகோர்த்து தாக்கும் போது இரவிலும் துஆ கேட்டு பகலிலும்  துஆ கேட்போம்.அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட எங்களை அவன் கைவிடமாடான். அவனுடைய மார்க்கம் அவன் பார்த்துக்கொள்வான். இன்றைய வருமானம் ஆயிரம். அதை எப்படி இருமடங்காக்குவது என்ற யோசனை உயிருள்ள வரை தொடர்திர்ந்திருக்கும்.

இவ்வாறான போக்கு தொடர்ந்திருக்கும் போது வேட்டை நாய்களின் பற்களில் இரத்தக்கறைகள்தான் மீதமிருக்கும்.

இந்த நிலைமையில் உமது நண்பர்களும் நாமும் இந்த பணியை புனிதமாய் ஏற்று களத்தில் இறங்கியுள்ளோம். மாயயை  காட்டி சமூகத்தை மயக்காமல் மாதிரியை காட்ட எடுக்கும் முயற்சி விரைவில் உலகறியும். உமது உயிரையும் உமது பொருளையும் உமது ஆற்றலையும் வேண்டி நிற்கும் உன் சமூகம் உனது தியாகத்தை மிம்பெர் மேடைகளில் உரக்கச் சொல்லும் காலம் விரைவில் வரும். இன்னலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

எமது கையால் எமது பள்ளிகளை உடைக்கும் சமூகம் எப்படி அவர்களது கையால் அவர்களது பள்ளிகளை உடைக்கவைப்பது என்று தெரிந்துகொள்ளும். சதிகாரர்களுக்கெல்லாம்  சதிகாரன் அல்லாஹ். அவன் எம்மை கொண்டு அந்த சதிகளை முறியடிக்க திட்டமிட்டால் வேண்டாமென்றா சொல்லபோகிறோம்.

"இன்னும்,அவர்களின் உள்ளங்களில் உள்ள கோபங்களை போக்கி விடுவான்.அல்லாஹ் தான் நாடுவோரை மன்னிப்பான்.அல்லாஹ் நன்கறிந்தவனும் ஞானமிக்கவனுமாவான் " (அல்குர்ஆன் 9:15)


No comments

Powered by Blogger.