Header Ads



கிழக்கு மாகாணத்தில் முதலிட வாருங்கள் - ஹாபிஸ் நஸீர்


(ஏ.எல்.றபாய்தீன்பாபு)

தனியார்துறை பங்களிப்புடனான அபிவிருத்தி முயற்சிக்கான செயலமர்வு சனிக்கிழமை திருகோணமலை வெல்கம்பே ஹோட்டலில் கிழக்கு மாகாண விவசாய , கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி கிராமிய கைத்தொழில்,உல்லாசத்துறை அமைச்சின் அனுசரனையோடு காலை முதல்,மாலை வரை நடைபெற்றது.இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தைச் சேரந்த தனியார்துறை முதலீட்டாளர்கள்.வர்த்தக சம்மேளனத்தின் தலைவர்கள் கலந்து கொண்டனர்

அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன் வரவேற்புரை நிகழ்த்தனார்.மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் விசேட உரை நிகழ்த்துகையில் யுத்தத்தினாலும்,இயற்கை அழிவுனாலும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்ககைத் தரத்தை அபிவிருத்தி செய்வதற்காக தனியார் துறையினரும் முதலீட்டாளர்களும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சோடு இணைந்து செயல்பட முன்வருமாறு அழைப்பு விடுத்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் அனுசரனையோடு உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைத்து வந்து இந்த மாகாணத்தை அபிருத்தி செய்வதற்கு சிறந்த ஆலேசனைகளையும்,வழிகாட்டல்களையும் வர்த்தக சம்மேளங்கள் தம்மோடு கைகோர்த்து வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.




;

No comments

Powered by Blogger.