புத்தளம், கற்பிட்டி பிரதேசங்களுக்கு ஆபத்து - எச்சரிக்கிறார் யஹியா
இந்தியா குடான்குளம் அனுமின் நிலையத்தின் மூலம் இலங்கையிலுள்ள புத்தளம் கற்பிட்டி பிரதேசங்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எ. யஹியா தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஏ. யஹியா இன்று வடமேல் மாகாண சபை அமர்வுக்கு வருகை தந்தபோது அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட சுனாமியின் போது ஜப்பானின் அனுமின் நிலையத்தின் தாக்கத்தத்தினால் பாரியளவு பாதிப்பு ஏற்பட்டன. இது குறித்து தமிழ் நாட்டு மக்கள் தங்களுக்கு சரியான பாதுகாப்பு அரண் உத்தரவாதம் வழங்கப்பட வில்லை என வேண்டி குரல் கொடுத்து வருகின்றனர்.
தற்போது தொடர்ந்து ஆசியாப் பிராந்தியத்தில் சுனாமித் தாக்குதல்கள் நிகழ்கின்றன. எனவே அண்மையிலுள்ள நேச நாடான இந்தியா 150 – 200 கிலோ மீட்டர் தூரத்தில் புத்தளம், கல்பிட்டி பிரதேசம் அமைந்துள்ளது. இது தொடர்பான மக்கள் மத்தியிலும் அரச உயர் மட்டத்திற்கும், இந்திய உயர் இஸ்தானிராலயத்திற்கு கவனத்திற் கொண்டு செல்லவுள்ளதாகவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முதலில் மக்களுக்கு சேவை செய்யச்சொல்லுங்கள் அனுமின் தாக்கம் தமிழ் நாட்டிலிருந்து வர தேவை இல்லை எமது நுரைச்சோலை அனல்மின் தாக்கம் எமது கல்பிட்டி புத்தளம் மக்களுக்கு போதும் அதனை நிறுத்த இவர்கள் என்ன செய்தார்கள். எதிலெல்லாம் அரசியல் செய்வதென்று வெவஸ்தை வேண்டாம். மக்கள் வரட்ச்சியால் வாடினார்கள் இன்று காற்று மழை என்று வாடுகிறார்கள் அதற்கு இவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள். நேற்று ஆளும் கட்சி பக்கம் அமர்ந்தது இதட்குதானோ....... ஐயோ சாமி ஆளை விடுங்க .......
ReplyDelete