உகண்டா ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு (பிரத்தியேக படங்கள் இணைப்பு)
(பட உதவி - சுதத் சில்வா ஜனாதிபதி செயலகம்
செய்தி - எம்.ஜே.எம். தாஜுதீன்)
உகண்டா ஜனாதிபதி யோவெரி ஹகுடா இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி செயலகத்துக்கு விஜயம் செய்த உகண்டா ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு ஜனாதிபதியும் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் பெரும் வரவேற்பளித்தனர். இராணுவ மரியாதையும் அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இலங்கைக்கும் உகணடாவுக்கும் இடையில் இன்று ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இலங்கை - உகண்டா நட்புறவு தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் உகண்டாவில் அமைத்தல் - பொருளாதார - வர்த்தக மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பு- இரு நாடுகளிடையே கலை மற்றும் கலாசார ஒத்துழைப்பு - உல்லாசப் பிரயாணத்துறை அபிவிருத்தி- ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தங்களில் இரு நாட்டு உயர் அதிகாரிகள் கைச்சாத்திட்டனர்.
Post a Comment