Header Ads



இலங்கைக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்போகிறதாம் அமெரிக்கா


(tm)

அமெரிக்க மாட்டிறைச்சியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க இறைச்சி ஏற்றுமதி கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அதுமட்டுமன்றி அமெரிக்க உற்பத்திப் பொருட்களை பரவலான வீச்சில் ஏற்றுமதி செய்வதற்கும் தீர்மானித்துள்ளது.

அமெரிக்க இறைச்சி சந்தை, 2003ஆம் ஆண்டு மூடப்பட்டது. தற்பொழுது பொருளாதாரம் மற்றும் அரசியல் காலநிலை நிறுவப்பட்டுள்ளதனால் இந்த சந்தர்ப்பத்தை மீண்டும் வலய சந்தைகளில் நம்பிக்கையுடன் அணுகுவதற்கு தீர்மானித்ததாக அமெரிக்க இறைச்சி ஏற்றுமதி கூட்டமைப்பின் ஆசிய பசுபிக் வலயத்துக்கான பிரதித் தலைவர் ஜொயில் ஹக்கார்ட் தெரிவித்துள்ளார். 

இலங்கையர் சமாதானத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் தற்போது பொருளாதார அபிவிருத்தி மேம்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையும் புத்துணர்வு பெற்றுள்ளது. மொத்த தேசிய உற்பத்தி 8 சதவீதமாக இருக்கின்றனது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் நோக்கிலேயே மேற்படி தீர்மானத்தை எடுத்ததாக ஜொயில் ஹக்கார்ட் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

2 comments:

  1. நல்ல விஷயம் தான் ஹலால் மாட்டு இறைச்சியை மலிவு விலையில் இறக்குமதி செய்வது,இல்லையென்றால் எதிர்காலத்தில் எளிய மக்களுக்கு மாட்டு இறைச்சியை தின்படுக்கு வாய்ப்பே கிடைக்காது.

    ReplyDelete
  2. கூடவே madcow வியாதியையும் சேர்த்து அனுப்பு வார்கள் . கவனம்

    ReplyDelete

Powered by Blogger.