காத்தான்குடியில் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- (படம் இணைப்பு)-
(எப்.எம்.பர்ஹான்)
பலஸ்தீன் (காஸா)-இஸ்ரேல் போர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் பலஸ்தீன் காஸா முஸ்லிம்களுக்கு செய்த அநியாயத்திற்கும்'அநீதிகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிராக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமான மட்டக்களப்பு -காத்தான்குடி பிரதேசத்தில் காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பரின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி 5 ஜாமிஉழ்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலிள் ஜூம்மா தொழுகையின் பின்னர் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஜாமிஉழ்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலிள் ஆரம்பமான ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பல்வேறு சுலோகங்களை ஏந்தி கோசம் எழுப்பிய வன்னம் இக்பால் சனசமூக நிலையம் வரை சென்று இஸ்ரேல் நாட்டுக்கொடியும் அந்த நாட்டு பிரதமரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டன.
இவ் ஆரப்பாட்டதில் காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பர் மற்றும் அதன் உறுப்பினர் சியாட் மற்றும் பொது மக்கள் 'இளைஞர்கள்'சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment