Header Ads



'சீரழியும் வீதி' - கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகள் கவனிப்பார்களா..?? (படங்கள்)


(சுலைமான் றாபி) 

உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 30 மில்லியன் (03 கோடி) ரூபா செலவில் காபட் வீதியாக அமைக்கப்படவுள்ள நிந்தவூர் வைத்தியசாலை  வீதி சுமார் இரண்டு  மாதங்களுக்கும் மேலாக இடைநடுவில் கைவிடப்பட்டு காணப்படுகிறது. ஊரின் பிரதான வீதியாக காணப்படும் வீதிகளில் இதுவும் ஒன்று. இங்கு  ஜும்மா பள்ளிவாசல், பெண்கள் உயர்தரப்பாடசாலை, குர்ஆன்  மதரசா , வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மற்றும் இன்னும் முக்கிய வர்த்தக நிலையங்கள் இவ்வீதியிலே காணப்படுகிறது. இருந்த போதும் இப்பாதை செப்பனிடும் பணியில் முதல் கட்டமாக கொங்கிரீட்   கற்கள் இடப்பட்டு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன் போது வீதியை அகலமாக்கும் பணியில் ஒரு சில பொது மக்கள் தங்கள் வீட்டு எல்லையை உடைப்பதற்கு தடை விதித்து நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருக்கின்றனர். இதனால் இப்பாதை புனரமைப்பு வேலைகள் பாதியில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இது சம்பந்தமாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் MAM தாஹிர் அவர்களைக் கேட்ட போது: இவ்வைத்திய சாலை வீதியானது சுமார் 1500 மீற்றர் தூரம் கொண்டதாக காணப்படுகிறது. இருந்த போதும் இதில் 125 மீற்றர் தூரம் கொண்ட குடியிருப்பாளர்களின்  பகுதிகள்   மட்டுமே பிரச்சினைக்குட்பட்ட பகுதியாகும். மீதமாக காணப்படும் ஏனைய தூரதிற்கு பாதையை செப்பனிட முடியும். இதற்கான அனுமதியினை பிரதேச சபை வழங்கியதாகவும், இது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 22 , 23  ம் திகதிகளில் நிந்தவூர் பிரதேச  சபையில் இடம்பெற இருப்பதாகவும் குறிப்பிட்ட தவிசாளர்:  பாதையின் அபிவிருத்தி வேலைகள் மந்த கதியில் இடம்பெற்று  வருவதாகவும் குற்றம் சாட்டினார். 

இருந்த போதும் இவ்வீதி அன்றாடம் பொது மக்களுக்கும், மீனவர்களுக்கும் பயனுள்ள வீதியாக காணப்படுகிறது.  இவ்வீதியால் பயணம் செய்யும் வயோதிபர்களும் சிறுவர்களும் பிரயாணிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். மேலும் வைத்திய சாலையில் காணப்படும் நோயாளிகளை ஏற்றிச்செல்லும் Ambulance (நோயாளர் காவு வண்டி) கூட கடற்கரை வீதியிநூடகவே அவசர சிகிச்சையின்  போது வேறு வைத்திய சாலைகளுக்கு செல்கின்றது. இதனால் நோயாளிகள் கூட பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். 

எனவே இக்கால நிலை மழை காலம் என்ற படியால் இவ்வீதியை முறையாக செப்பனிட்டு பொது மக்களின் பாவனைக்கு  கையளிக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்  விடுக்கின்றனர். 







No comments

Powered by Blogger.