அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களின் ஆக்கத்திறன் வெளிப்பாடு
(எஸ்எல். மன்சூர்)
அக்கரைப்பற்று வலயத்திலுள்ள அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் முதன்நிலை அதாவது தரம் ஒன்று, இரண்டு மாணவர்களினால் அவர்களது ஆசிரிர்களினது வழிகாட்டலில் மிகவும் அழகான முறையில் உருவாக்கப்;பட்ட ஆக்கத்திறன் பொருள் கண்காட்சி இன்று(15.11.2012) நடைபெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.கிதுறு முகம்மது தலைமையில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்சேஹ். ஏ.எல்.எம். காசீம் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று வலயத்தின் கணக்காளர் றிஸ்வி யஹ்ஷர் மற்றும் விசேட அதிதிகளாக ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்ஏ. அபுதாஹிர், எஸ்எல். மன்சூர், பாடசாலை மேம்பாட்டு உத்தியோகதக்தரும் ஆசிரிய ஆலோசகருமான யுஎம். நியாசி மௌலவி, மாகாண அமைச்சர் உதுமாலெவ்வையின் மக்கள் தொடர்பு இணைப்பதிகாரி எம்.எஸ்.எம். ஜஃபர் பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலையின் அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கண்காட்சியானது மாணவர்களின் கற்றல்பேறுகளை விருத்தி செய்யும் நோக்குடன், மாணவர்களினாலும், ஆசிரியர்களினாலும் வகுப்பறைக் கற்றல் செயற்பாடுகளின் போது பிரயோகிக்கப்பட்ட மாதிரி மற்றும் உண்மைப் பொருட்கள் என்பனவும் காட்சிப் படுத்தப்படுத்தப்பட்டிருந்தன. ஆரம்பக்கல்வியில் தரம் ஒன்று, இரண்டு மாணவர்கள் விளையாட்டுடன் கூடிய கற்றற் செயற்பாடுகள், தேர்ச்சிமையக் கலைத்திட்டத்துடன் கூடிய அடிப்படையான தேர்ச்சிகளை மாணவர்கள் இனங்காணும் முறைகள், மகிழ்ச்சிகரமான கற்றல் செயற்பாடுகள், செயற்பட்டு மகிழ்வோம் என்பனவற்றுடன், சுற்றாடல்சார் செயற்பாட்டுப் பாடத்திட்டத்திலுள்ள அனைத்துத் தலைப்பினையும் உள்ளடக்கியவாறும் இவ் ஆக்கத்திறன் பொருள் கண்காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் இன்று நாடளாவிய ரீதியில் அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மரம்
நடுகைத் திட்டத்தின் ஒரு அங்கமாக இன்று வருகை தந்த அதிதிகளினால் தேசிய மரம் நடுகையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment