நிந்தவூரில் தேசத்திற்கு நிழல் (படங்கள்)
(சுலைமான் றாபி)
தயட்ட செவண "தேசத்திற்கு நிழல்" மர நடுகை விழா இன்று (15 .11 .2012) வியாழக்கிழமை நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியாணி RU அப்துல் ஜலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு
பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் பைசால் காசிம், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் MAM தாஹிர், பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமா லெப்பை, பிரதேச சபையின் உறுப்பினர்கள், கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் அல் ஹாஜ் MTA தௌபீக், நிந்தவூர் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அல் ஹாஜ் Dr முனீர் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், மௌலவிமார்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் "நிந்தவூரை பசுமையாக்குவோம்" எனும் தொனிப்பொருளில் சுமார் 50 மரங்கள் பிரதான வீதியில் நடப்பட்டன. பிரதான வீதியில் மரம் நடுகைக்கான அனுமதியினை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக மாகாணப்பணிப்பாளர் அல் ஹாஜ் ALM நிசார் வழங்கினார்கள்.
Post a Comment