யாழ்ப்பாணத்தில் திவிநெகுமே கண்காட்சி (படங்கள்)
வாழ்வின் எழுச்சியுடன் (திவிநெகும) இணைந்த சமுர்த்திக் கண்காட்சி யாழ். வேம்படி மகளீர் கல்லூரியில் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது
யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலுள்ள பயனாளிகளால் இக்கண்காட்சிக்கான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சமுர்த்திப் பயனாளிகளினுடைய உள்ளூர் உற்பத்திப் பொருட்களும் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கண்காட்சியில் ஆடை, கைப்பணிப்பொருள், தகவல்மையம், கைவினைப்பொருட்கள், உணவு-கடல் சார் உணவுகள், பனைசார் உற்பத்திகள், கைத்தொழில், என்ற அடிப்படையில் உள்ளூர் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவ் ஆரம்ப நிகழ்வில் இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதாரப் பிரிவுப் பொறுப்பதிகாரி நடேசராசா, சமுர்த்தி உதவி ஆணையாளர் மகேஸ்வரன், சமுர்த்தி இணைப்பாளர் ரகுநாதன், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி பயனாளிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment