ரஷ்ய ஜனாதிபதி ஜுடோ விளையாடி காயம்
ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுக்கு ஜூடோ பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதாக அந்நாட்டு பிரதமர் மெத்வதேவ் விளக்கமளித்தார்.
புதின் தனது உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவருக்குப் பெரிய அளவு பாதிப்பு ஏதும் இல்லை என்று செய்தியாளர்களிடம் மெத்வதேவ் தெரிவித்தார்.
புதின், கடந்த சில வாரங்களாக வெளி நாட்டுப் பயணங்களைத் தவிர்த்து வந்தார். இதனால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்து மெத்வதேவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment