ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தாக்குதலை நியாயப்படுத்துகிறது அமெரிக்கா
இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதல்களை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு ஹமாஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ள நாடுகளிடம் அமெரிக்கா வலியுறுத்தி இருப்பதாக வெள்ளை மாளிகை ஆலோசகர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
“எகிப்து, துருக்கி மற்றும் ஐரோப்பாவில் எமது ஒரு சில நட்பு நாடுகளைக் கொண்டு ஹமாஸின் ரொக்கெட் தாக்குதல்களை நிறுத்த அழுத்தம் கொடுத்து வருகிறோம்” என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பென்னட்டா இஸ்ரேலின் தாக்குதலை நியாயப்படுத்தினார். “வொயிஸ் ஒப் அமெரிக்கா” வுக்கு அவர் அளித்த பேட்டியில், “தற்போது இஸ்ரேல் செய்ய வேண்டியதைத் தான் அவர்கள் செய்கிறார்கள்.
காசாவில் இருந்து வரும் தாக்குதலை இலக்குவைத்தே அவர்களும் தாக்குதல் நடத்துகிறார்கள். சிவில் இலக்குகளை தவிர்த்து அவர்கள் தாக்குதலை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.
Post a Comment