Header Ads



விருப்பபடி செயற்படுங்கள் என்றார் ஹக்கீம் - பஷீர் சேகுதாவூத் + ஹரீஸ் கைச்சாத்திட்டனர்



பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேணையில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான பஷீர் சேகுதாவூத் மற்றும் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ள விடயம் பகிரங்கத்திற்கு வந்துள்ளது.

குற்றப் பிரேரணையில் கைச்சாத்திட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிட அரசாங்கத் தரப்பு மறுத்திருந்தது. இந்நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றப்பிரேணையில் கைச்சாத்திட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ஹசன் அலி எம்.பி. மேலும் கூறியிருப்பதாவது,

பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக அரசாங்கம் கொண்டுவந்துள்ள குற்றப் பிரேணையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது விருப்பப்படி செயற்படலாமென கட்சியின் தலைமைத்துவம் அறிவித்தது. இதையடுத்து குறித்த குற்றப்பிரேணையில் பஷீர் சேகுதாவூத்தும், ஹரீஸும் கைச்சாத்திட்டனர். 

இருந்தபோதும் அந்த குற்றப்பபிரேணையில் ரவூப் ஹக்கீமொ அல்லது நானோ கைச்சாத்திடவில்லை.

சிறியாணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான பிரேணை குறித்து முஸ்லிம் காங்கிரஸோ அல்லது கட்சியின் உயர்பீடமோ கூடி ஆராயவில்லையெனவும் ஹசன் அலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. நல்ல கதை ...நெடுப்பம்தான் போதா...

    ReplyDelete
  2. இதுபோன்ற சம்பவங்கள்தான் காக்கா பிடிப்பவர்களை அடையாளம் காட்டும். காட்டிவிட்டது...

    ReplyDelete
  3. ஹக்கீம் அடிக்கடி பாவிக்கும் சொல்லான " கட்சியின் ஒருமைப்பாடு " என்பதின் அர்த்தம் இப்பொழுது என்ன ?

    நல்ல மிலாறு கெடக்கு வாற ஏலேக்ச்சனுக்கு வாங்கோ ராசாமாரே ...............! ! ! !!!

    ReplyDelete

Powered by Blogger.