Header Ads



புல் வேளாண்மை ஊக்குவிப்பு தினம் (படங்கள்)


(அஸ்ஸிஹாபி)

புல் வேளாண்மை ஊக்குவிப்பு தினத்தை முன்னிட்டு பால் பண்ணையாளர்களுக்கு 'சீயோ திரி' இன புல்வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட கால்நடை வைத்திய நிபுணர்  டாக்டர் எஸ்.நிஸாம் தலைமையில் மூதூர் கட்டைபறிச்சான் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ரீ. கே.தவராஜன் ஜப்பான்'பீஸ் வின்ட்;' நிறுவனத்தின் வெளிக்கள இiணைப்பாளர் கானா தனிக்குச்சி,மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன்,மூதூர் கால்நடை வைத்திய நிபுணர் டாக்டர் டிலான் சில்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பால் உற்பத்தியை அதிகரிக்கும்  முகமாக   இந்தியாவிலிருந்து இறக்கு மதி செய்யப்பட்ட  போஷக்குமிக்க  'சீயோ திரி' இன புல் வகையை கால்நடைகளுக்கு வழங்கும் நோக்கத்திலேயே புல் வேளாண்மை ஊக்குவிப்புத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இந்தவகையில் .திருகோணமலை மாவட்டத்திற்கான  ஊக்குவிப்புத்திட்டம் மூதூரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்போது 50 பாற் பண்ணையாளர்களுக்கு புல் நாற்றுக்கல் வழங்கப்பட்டதோடு சேனையூர் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு பசும்பாலும் இலவசமாக வழங்கப்பட்டது.




No comments

Powered by Blogger.