Header Ads



மட்டக்களப்பில் நல்லிணக்கம் குறித்து பயிற்சிப்பட்டறை (படங்கள்)

(எப்.எம்.பர்ஹான்)

'தற்போதய சூழல் 'கற்றுக்கொண்ட பாடங்கள் 'முரண்பாட்டுத்தீர்வுகள்  எனும் தொனிப் பொருளில்  முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னனியின் ஏற்பாட்டில் சமயங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியொழுப்பும் நோக்கில் தமிழ்'சிங்கள'முஸ்லிம்'கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த சர்வமதப் பெரியார்களுக்கான சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றிய முழு நாள் பயிற்சிப் பட்டறை இன்று சனிக்கிழமை 10-11-2012 மட்டக்களப்பு நெக்டொப் ஒன்று கூடல் மண்டபத்தில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னனியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சிரேஸ்ட நிகழ்ச்சிதிட்ட இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல் தலைமையில் இடம்பெற்றது.

இக்கருத்தரங்கின் போது 1(பெரும்பான்மை'சிறுபான்மை சிக்கல்கள்-சமயங்களுக்கிடையேயான மேலாதிக்கங்கள்'சமயங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் மேலாதிக்கங்களும்) 2 ( வாந்திகளும் ஊடகங்களின் செயற்பாடுகளும் -சமயங்களை இழிவுபடுத்தும் செய்திகளை வெளியிடுதல்'சமூகத்திற்கு கேடானதும் பிழையானதுமான தகவல்களைப் பரிமாற்றம் செய்தல் )3 ( வன்முறைகள் செயற்பாடுகள் -ஹர்த்தால் 'ஆர்ப்பாட்டம்'மனித உரிமை மீறல் ( பெண்கள் 'முதியோர் 'சிறுவர்'நலன் உட்பட )4( சமயங்களுக்கு சம உரிமைகள் -சமயக் கிரியைகளுக்கு தடைகளும் இடையூறுகளும்'சகல சமயங்களுக்கும் சமமான அரச பாதுகாப்பும் உதவியும் இல்லாமை போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு குழச் செயற்பாடுகளும் இடம்பெற்றன.

இக்கருத்தரங்கில் தமிழ்'சிங்கள'முஸ்லிம்'கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த சர்வமதப் பெரியார்கள் நாவல் ஆசிரியர் சாலிஹா சித்தீக்' முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னனியின் தலைமையக சிரேஸ்ட நிகழ்ச்சிதிட்ட இணைப்பாளர்களான லைலா ஓடையார் 'நலீரா சாலி'பெண் ஊடகவியலாளர் சர்மிலா இம்தியாஸ்'மற்றும் சிரேஸ்ட 'இளம் ஊகவியலாளர்களான பி.ரி.அப்துல் லத்தீப்' ஏ.எச்.ஏ.ஹூசைன்'எம்.எஸ்.எம்.நூர்;தீன் 'எம்.எஸ்.எம்.சஜி என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியானது நிலைத்திருப்பதும் 'நீண்ட காலத்திற்குமான சமாதானம் என்பது வீட்டிலிருந்து சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து ஆரம்பமாக வேண்டுமென நம்புகின்றது. இந்தப் பயிற்சிப்பட்டறையின் குறிக்கோள் சமுதாய மட்டத்திலுள்ள செல்வாக்குடைய தலைவர்களின் ஆற்றலையும்'அறிவையும் விருத்தி செய்து இதனூடாக அவர்கள் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்குவகிப்பதற்கு ஊக்குவிப்பதாகும்.


















No comments

Powered by Blogger.