Header Ads



கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகளும், பொத்துவில் மண்ணும்..!



(இர்ஷாத் ஷர்கீ)

அறுகம் குடா, கொட்டுக்கல், குடாக்கல், மண்மலை,  அழகிய ஆற்றங்கரையோரங்கள் போன்ற உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளின் மனம் கவர் இடங்களையும், கால் நடை வளர்ப்பு,விவசாயம்,கடற்ரொழில் போன்ற பிரசித்தி பெற்ற தொழில்களை மேற்கொள்ளத்தக்க அனைத்து வளங்களையும் கொண்ட இப் பொத்துவில் பிரதேசம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டதின் கரையோரப்பிரதேசத்தில் தெற்கில் உள்ள ஒரு முஸ்லிம் பிரதேசமாகும், இப் பொத்துவில் பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிகையினைக்கொண்ட பெரும்பான்மை இன சிங்கள சகோதரர்களும்,தமிழ் மக்களும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஏனைய பிதேசங்களுடன் இப் பொத்துவில் மண்னை ஒப்பிட்டுப்பார்க்கும் போது வளங்களில் முன்னிலையில் காணப்பட்டாலும் பல பிரச்சினைகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ள ஒரு பிரதேசமாக இருப்பதோடு அப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தகுதியானவர்கள் இல்லாமல் இருப்பது கவலைக்குறிய விடயமாகும்.

இப் பொத்துவில் பிரதேசம் எதிர் நோக்கியுள்ள பிரதான பிரச்சினைகளை பார்க்கின்ற போது எல்லை நிர்ணயப்பிரச்சினை, பெரும்பான்மை சகோதரர்களாள் சுவீகரிக்கப்பட்ட அவர்கள் எல்லைகளை அண்டியுள்ள தரிசு நிலங்களையும், சுமார் 2000 ஏக்கர்களுக்கு மேலான முஸ்ஸிம் விவசாயிகளின் விவசாய நிலங்களையும் மீட்டெடுப்பதற்கான அரசியல் பலம் இல்லாமல் இருப்பதோடு, நீரினை சேமித்து வைத்து விவசாயம் செய்வதற்கான நீரனைகள்,குளக்கட்டுகள் குறிப்பிட்ட அளவு இருந்த போதும் அவைகள் பாவனைக்கு ஏற்றவாறு புணர்நிர்மானம் செய்யப்படாமல் இருப்பதால் காலம் காலமாக நீர் பற்றாக்குறை காரணமாக பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களை கை விட்டு விடுதல் ,கால் நடை உரிமையாளர்கள் தங்களின் கால் நடைகளை மேய்ப்பதற்கான உகந்த இடங்கள் கானப்பட்ட போதும் உத்தியோக பூர்வமான முறையில் மேய்ச்சல் தளம் ஒன்று இல்லாம் இருப்பதால் கால் நடை வளர்ப்பாளர்கள் உயிர் ஆபத்துகளை எதிர்கொண்டு காடுகளுக்கு தங்கள் கால் நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டுசெல்லுதல், வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை நிபுணர், மகப்பேற்று வைத்தியர் இன்மை போன்ற பல்வேறு பட்ட பிரச்சினைகள் இப் பொத்துவில் பிரதேசத்தில் காணப்படுகின்றன.

இப் பொத்துவில் பிரதேசத்துக்கு தேர்தல் காலங்களில் வாக்கு வேட்டைகளில் ஈடுபடுவதற்கு வரும் அரசியல் தலைமைகளும், அரசியல் வாதிகளும் தங்கள் கையில் எடுக்கும் ஆயுதம் இப் பொத்துவில் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளாகும்.கடந்த பாராளுமன்ற, ஜனாதிபதி,முதலாம்,இரண்டாம் கிழக்கு மாகாண சபைத்தேர்தல்கள், பிரதேச சபைகளுக்கான தேர்தல் காலங்களில் இச்செயற்பாட்டினை மிகவும் அவதானிக்க கூடியதாக இருந்ததோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரஊப் ஹக்கீம் அவர்களும்,அக்கட்சியின் பிரதான செயளாலர் பாராளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி போன்றவர்கள் அரசியல் மேடைகளிள் இப் பிரச்சினைகள் பற்றி அதிகமாக பேசியதோடு தேர்தல் முடிந்த பின்னர் இப்பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு தமது கட்சி முழு மூச்சாக செயற்படும் என்று வாக்கிறுதி அளித்து விட்டு இப்பிரச்சினைகள் தொடர்பாக எந்த விதமான ஆக்க பூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் இருப்பதானது  சானக்கியம் அற்ற கவலைக்குறிய ஒரு விடயமாகும்.

அவ்வாரே அமைச்சர் அதாஉல்லா தலைமயில் கட்சிக்கு ஆதரவு திரட்டும் பிரச்சார மேடைகளில் இப் பொத்துவில் பிரதேசம் என் சொந்த பிரதேசத்தை போன்றதாகும், நான் எனது ஊரான அக்கறைப்பற்றை நேசிப்பது போன்று இம்மண்னையும் நேசிக்கின்றேன் என்று கூறிய வார்தைகள் காற்றோடு கலந்து கரைந்து போய் விட்ட ஒன்றாகும். அதே போன்று பொத்துவில் பிரதேசத்தின் அரசியல்வாதிகள் கூட கடந்த பிரதேச சபைக்கான தேர்தல் காலங்களில் இப் பிரச்சினைகள் தொடர்பாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதானது எதிர் காலத்தில் இப் பிரதேசத்தின் இறுப்புக்கு ஆபத்தாக அமையலாம் என்பது குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும்.

இப் பொத்துவில் பிரதேசமும் மக்களும் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான ஆக்க பூர்வமான செயற்பாடுகளில் அக்கறை காட்டுமாறு  நீதி அமைச்சர் ரஊப் ஹகீம்,உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்  அதாஉல்லாஹ் அவர்களிடமும் பாராளுமன்ற உருப்பினர்களான கெளரவ ஹரீஸ், பைஸால் காஸீம், ஹஸன் அலி அவர்களிடமும் கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான கெளரவ மன்சூர், உத்மான்லெப்பை, ஹாபிஸ் நஸீர் அவர்களிடமும், மாகாண சபை உறுப்பினர்களான கெளரவ தவம், ஜெமீல், அமீர், இதர அரசியல் பிரமுகர்களிடமும் கேட்டுக்கொள்கின்றனர்.


3 comments:

  1. இக்கட்டுரையில் ஒரு திருத்தம்,அது என்னவென்றால் கிழக்கு மாகான சபை அமைச்சர் கண்ணியத்திற்குரிய உதுமாலெப்பை அவர்களாலும்,கண்ணியத்திற்குரிய அமைச்சர் அதாவுல்லா அவர்களாலும் தேர்தல் காலங்களில் முன்வைக்கப்பட்ட 2/3 வாக்குறுதிகள் நிறைவேரிக்கொண்டிருக்கின்றன மேலும் மாகாண சபை அமைச்சர் உதுமாலெப்பை அவர்கள் பொத்துவில் பிரதேச மக்களின் நலன்களில் மிக உன்னிப்போடும்,விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் ஆராய்ந்து அதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறார் என்ற உண்மையை எந்தவித கட்சி பாகுபாடின்றி பொத்துவில் குடிமகன் என்ற ஒரே ஒரு காரனத்தை கொண்டு இந்த உண்மை நிலையை சுட்டிக்காட்டுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.....

    ReplyDelete
  2. pottuvil maakkal athika, per slmc kaararkal. eav hakeemidam muraiyidakkuudatha?

    ReplyDelete
  3. dear jshabry...:

    ungal thiruththathil oru thirutham nallave thoppiye pottuvittirukkiraar U L.

    pottuvilukku pala pirachinaikal irukku aanaal avatrilellam muthanmayaana pirachinai (education) kalvithaan.naangal ithu thodarpaaka uthumalebbeyudan tri star hotelil santhithu pesiya pothu mirandupoy Ottam pidithavarthan inthe U L.kalvi valayam thodarpaaka pesiya pothu avar mukam koniyathu emakkuthaan theriyum.please neenge kuttaya kulappa vendaam.manthaikalaaka namm vaazvathuthan avarkali aasaiyaakum.pottuvil ithuvarai adaintha afiviruthikal elaam thaanaka vanthavaithan.ivvaru varupavatrai thiruppamal irunthal athuthaan avarkal seyyum uthaviyaakum. ex CTB, TECHNICAL COLLEGE,LIGHT HOUSE naalu kaasu sambathikka ashrof memorial atha arangu polathaan ithuvum.

    pirathaana katturai innum pala vidayangalil karuthu koora maranthuvittathaa? ungel muyetsikku mikavum nanri.

    ReplyDelete

Powered by Blogger.