டுபாயிலிருந்து இந்திய வந்த பயணி விமானத்திற்கு உரிமை கொண்டாடிய சுவாரசியம்
இன்று காலை அமீரகத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் விமானம் தறையிறங்கிய பின்னர் இறங்க மறுத்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விமானம் தறையிறங்கி சகல பயணிகளும் இறங்கி்ச் சென்ற பின்னரும் குறித்த பயணியான இளைஞர் விமானத்திலேயே இருந்துள்ளார். இதனை அவதானித்த விமானப் பணிப்பெண்கள் அவரிடம் சென்று விமானத்திலிருநது இறங்குமாறு கேட்டுள்ளனர்.
எனினும் குறித்த பயணி இறங்க மறுத்ததுடன் இது தன்னுடைய விமானம் என்றும் விமானத்தை தனது ஊருக்கு செலுத்துமாறும், தன்னுடைய விமானத்திலிருந்து என்னை இறங்கச் சொல்வதற்கு நீங்கள் யார் என கேட்டுள்ளார்.
இவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட விமானப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இவர் தீவிரவாதியாக இருக்கலாம் என அஞ்சிய விமானிகள் உடனடியாக விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விபரத்தைத் தெரிவித்ததையடுத்து பாதுகாப்பு படையினர் உட்பட விஷேட அதிரடிப்படையினரும் விமாத்தினுள் ஏறி குறித்த இளைஞரை விமானத்தைவிட்டு வெளியே இறக்கி சோதனைக்குட்படுத்தினர்.
இதில் அவரிடம் எதுவித ஆயுதங்களோ இல்லை என்பதையும், அவர் தீவிரவாதி இல்லை என்பதையும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டனர். மேலும் அவ்விளைஞர் அமீரகத்திற்கு பிரிண்டிங் பிரஸ் ஒன்றுக்குப் பணிக்குச் சென்ற பின்னர் அங்கிருந்து அவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதன் காரணத்தினால் மன நிலை பாதிக்கப்பட்டுள்ள விடயத்தையும் பாதுகா்ப்பு தரப்பினர் தெரிந்து கொண்டனர்.
பின்னர் அவரை முதலுதவிச் சிகிச்சைக்கு உட்படுத்தி அவரை அழைத்துச் செல்ல வந்த அவரது உறவினர்களுடன் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.inneram
Post a Comment