லண்டனில் நூர் இனயத் கானுக்கு சிலை - திப்பு சுல்தானின் நேரடி வாரிசாம்..!
18-ம் நூற்றாண்டில் இந்தியாவின் மைசூர் பகுதியை மன்னர் திப்பு சுல்தான் ஆண்டு வந்தார். அவரின் நேரடி வாரிசான நூர் இனயத் கான் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிரிட்டனுக்காக பிரான்சில் இருந்து உளவு வேலைகளில் ஈடுபட்டு வந்தார். உளவு இளவரசி என்று அழைக்கப்பட்ட 30 வயதான நூர் இனயத் கான் ஜெர்மனியின் நாசிப்படையினரால் அப்போது பிடிக்கப்பட்டார். பின்னர் 1944-ம் ஆண்டு அவர் கொடுமைபடுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
உளவு இளவரசி நூரின் தியாகத்தை ஞாபகப்படுத்தும் விதமாக லண்டனில் உள்ள கோர்டன் ஸ்குயர் கார்டன் பகுதியில் நேற்று அவருக்கு மார்பளவு சிலை திறக்கப்பட்டது. அவரின் தைரியத்தையும் தியாகத்தையும் புகழ்ந்து, பாராட்டி ராணி எலிசபெத்தின் மகள் இளவரசி அன்னே இந்த சிலையை திறந்து வைத்தார்.
பிரிட்டனில் திறக்கப்பட்ட முதல் முஸ்லிம் சிலை இதுவாகும். மேலும் ஆசியாவின் முதல் பெண் சிலையும் இதுவே என்றும் கூறப்படுகிறது. 60 வருடங்களுக்கு பிறகு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த கௌரவம் பத்துமாதம் கொடுமைபடுத்தப்பட்ட அவரின் தியாகத்திற்கு இணையானது அல்ல என்றும் கூறப்படுகிறது.
Post a Comment