Header Ads



ஈரான் வான்பரப்பில் அத்துமீறும் அமெரிக்கா - பாதக விளைவு ஏற்படுமென எச்சரிக்கை


சர்வதேச சட்ட திட்டங்களுக்கு எதிராக நடப்பதாகவும், கடற்பகுதிகளில் அத்துமீறி நுழைவதாகவும் அமெரிக்கா மீது ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூனுக்கு ஐ.நாவுக்கான ஈரான் தூதர் முகமது கஸாயி கடிதம் எழுதி உள்ளார்.

இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, அமெரிக்க கடற்படையினர் ஈரான் நாட்டின் வான்பகுதியில் அத்து மீறி நுழைகின்றனர். கடற்கரையோரத்தில் அமைந்துள்ள புஷ்ஹெர் நகரின் வான்பகுதியில் அக்டோபர் மாதம் 7 முறையும், நவம்பர் மாதம் ஒரு முறையும் அமெரிக்க கடற்படையினர் அத்துமீறியுள்ளனர்.

சர்வதேச சட்டதிட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா நடந்து வருகிறது. இந்நடவடிக்கையினால் ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்படின் அதற்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும். அமெரிக்காவின் அத்துமீறல் நடவடிக்கையை ஐநா கண்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரையிலும் ஈரானின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.

No comments

Powered by Blogger.