நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தண்ணீர் விட்டான் கிழங்கு
நீரிழிவு நோயை, தண்ணீர் விட்டான் கிழங்கு குணப்படுத்துவதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த தவறினால், இருதயம், சிறுநீரகம், பாதங்கள், மூளை உள்ளிட்டவை பாதிக்கும் அபாயம் ஏற்படுகிறது.இதற்காக ஏராளமான ஆராய்ச்சிகள் நடக்கின்றன. சர்வதேச அளவில், விழிப்புணர்வு பிரசாரங்களும் செய்யப்படுகின்றன.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்லைகழகத்தில், தண்ணீர் விட்டான் கிழங்கு குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றை, எலிகளுக்கு ஊசி மூலம் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.எலிகளின் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க செய்யும் மருந்து செலுத்தப்பட்டது. அதன் பின் தண்ணீர் விட்டான் கிழங்கு சாறும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, 28 நாட்கள் நடந்த இந்த சோதனையில், எலிகளின் உடலில் இன்சுலின் அதிகமாக சுரந்து, சர்க்கரை அளவு கணிசமாக குறைந்தது கண்டறியப்பட்டது.இந்த பரிசோதனை மூலம், தண்ணீர் விட்டான் கிழங்குக்கு, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment