Header Ads



சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் - புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு


சிகரெட் பிடித்தால் மூளை பாதிக்கும் அதே நேரத்தில் ஞாபகசக்தி, பகுத்தறிவு திறன் குறையும். மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மூளை பாதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் லண்டனை சேர்ந்த கிங்ஸ் கல்லூரியின் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இது 50 வயதுக்கு மேற்பட்ட 8,800 பேரிடம் நடத்தப்பட்டது. அதில் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படுவதை கண்டறிந்தனர்.

ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு சிகரெட் பிடிப்பது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. சிகரெட் பிடிப்பதால் மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது. அதன் மூலம் 'அல்ஷமீர்' போன்ற ஞாபக மறதி, பகுத்தறிவு குறைதல், கல்வி அறிவு குறைதல் போன்றவை ஏற்படுகிறது. இவை தவிர உடலில் கொழுப்பு சத்து அதிகரித்தல், உடல் பருமன் அதிகரிப்பு போன்றவையும் ஏற்படுகிறது.

மூளை பாதிக்கப்படுவதால் 65 வயதினரில் மூன்றில் ஒருவருக்கு புத்தி சுவாதீனம் இன்மை போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்தவரை சிகரெட் பிடிப்பதை நிறுத்த லேண்டும். சத்தான சமச்சீரான உணவு வகைகளை நேரம் தவறாமல் சாப்பிட்டு உடல் நலத்தை பேண வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.