பள்ளிவாசல்களில் புதிதாத ஜும்ஆ தொடங்குவதற்கு உலமா சபையின் அனுமதி கட்டாயம்
(ஸராஜ் எம். சாஜஹான்)
நாட்டில் எந்தவொரு பகுதியிலும் உள்ள பள்ளிவாசல்களில் புதிதாக ஜும்ஆ தொழுகை ஆரம்பிக்கப்படுவதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் அனுமதி பெறவேண்டும். உலமா சபையின் சிபார்சின் அடிப்படையிலேயே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டுமெனவும் புதிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலமா சபையின் சிறப்பு கூட்டமொன்று நேற்று வியாழக்கிழமை உலமா சபையின் தலைமையகத்திந் நடைபெற்ற போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை உலமா சபையின் செயலாளர் மௌலவி எம்.எம்.எம்.முபாரக் உறுதிப்படுத்தியுள்ளார்.
இயக்க வேறுபாடுகள், கொள்கைகள், பிளவுகள் காரணமாக கிராமங்களில் புதிய பள்ளிகள் கட்டப்பட்டு வருவதுடன், நினைத்த மாத்திரத்தில் ஜும்ஆ தொழுகையும் ஆரம்பித்து விடுகின்றனர். இதற்கு உரிய தரப்பினரின் அனுமதியும் பெறப்படுவதில்லை. இதனால் முஸ்லிம் ஊர்கள் பிளவுபட்டு மோதலும், வன்முறையும் உருவெடுத்துள்ளது.
இந்நிலை நீடிக்குமாயின் முஸ்லிம் சமூகுத்தின் இருப்புக்கும், பாதுகாப்புக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படலாம். முஸ்லிம்கள் மீது குறிவைத்திருக்கும் இனவாதிகளின் கையும் இதனால் ஓங்கும். எனவேதான் ஜும்ஆ தொழுகையை புதிய பள்ளிவாசல்களில் நடாத்துவதற்கு அனுமதி பெறப்பட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
உங்களைப் போன்று எங்களுக்கு கொள்கையில் வளைந்து கொடுக்க முடியாது மௌலவி.
ReplyDeleteபோலி சமூக ஒற்றுமை எங்களுக்கு வேண்டியதில்லை, முடியுமென்றால் அல்குர்ஆன் -ஹதீஸின் அடிப்படையிலான உண்மையான சமூக ஒற்றுமையை ஏற்படுத்துங்கள்,ஒரு ஊரில் ஒரு ஜும்மா நடத்துவோம்.
அதை விடுத்து ஜும்மா நடத்துவதட்கெல்லாம் யாரிடமும் அனுமதி கேட்க இஸ்லாம் சொல்லவில்லை