திவிநெகும குறித்து சர்வஜன வாக்கெடுப்பு..?
மாகாணங்ளின் அதிகாரங்களை வலுவற்றதாக்கும் திவிநெகும சட்டமூலம் குறித்து சர்வஜன வாக்குகெடுப்பு நடத்தப்படவிருப்பதாக ஊடக தகவல்களிலிருந்து அறியமுடிகிறது.
உயர் நீதிமன்றம் இதுகுறித்த அறிவிப்பை பாராளுமன்ற சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன
பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அடிப்படையில் திவிநெகுமவிற்கு ஆதரவு வழங்கப்பட வேண்டிய அதேவேளை, சர்ஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு அறிவித்துள்து. திவிநெகும சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் உச்ச நீதிமன்றின் ஆலோசனையை கோரியிருந்தது.
இந்த ஆலோசனை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதவான் குழாமின் தலைமைப் பொறுப்பை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திவிநெகும சட்டம் தொடர்பான விவாதம் பாராளுமன்றில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, சர்ஜன வாக்கெடுப்பு நடத்தியேனும் திவிநெகும சட்டத்தை அமுல்படுத்தப் போவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment