Header Ads



''வாசகரின் பதில் விமர்சனம்''



2012.11.23 அன்று வெளியான இஸ்ரேலிய யுத்தமும், நம்மவர்களின் உணர்வுகளும் என்ற கட்டுரைக்கு மறுப்பு

இன்று எம் மத்தியில் பல சமூக, மார்க்க அமைப்புக்கள் இயங்குகின்றது. அவற்றில் சில வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை கொண்டிருக்கின்றது. இன்னும் சில அதற்கு மாற்றமாகவும் உள்ளது. ஆனால் செயற்படுகின்ற இயக்கங்கள் எல்லாம் பூரணமான முறையில் செயற்பட வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் இவர்கள் செயற்படாத அல்லது மிகக் குறைவாகச் செயற்படுகின்ற இயக்கங்களை குறித்து பேசுமதில்லை.

இவர்களது விமர்சனங்கள் அனைத்தும் தன்னால் இயன்ற அளவு செயற்படும் இயக்கங்களுக்கு மாத்திரமே. இவ்வாறானவர்கள் செயற்படுகின்ற அமைப்புக்களது பொறுப்புக்களை குறித்தோ அல்லது அவர்களது சூல்நிலைகள் குறித்தோ பூரணமாக விளங்காமல் அறிக்கை விடுகின்றனர். இவர்கள் அவர்களை பற்றி குறைகாண்பதிலே தம்மை ஈடு படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்குவதோ அல்லது பாராட்டுவது கிடையாது.

இவர்கள் தனி நபர்களைக் குறித்து பேசும் போது  பொதுவாக செய்தாலும் தவறு செய்யா விட்டாலும் தவறு  என்ற மனப்பான்மையை கொண்டிருப்பதை இவர்களது கட்டுரை மூலம் விளங்க முடிகின்றது.

** நான் JAFFNA MUSLIM இன் நெடுநாள் வாசகன். இவ்வாறான  கட்டுரைகளை JAFFNA MUSLIM பிரசுரிப்பது JAFFNA MUSLIM இன் தரத்தை குறைத்து விடும் என்பது உன்மை.  


(JAFFNA MUSLIM வாசகன்)

No comments

Powered by Blogger.