Header Ads



பாடசாலைகளை இனரீதியாக பிரிக்கப்படுவதை எதிர்க்கிறேன் - அமைச்சர் வாசுதேவா


பாடசாலைகளை இனரீதியாகப் பிரிக்கப்படுவதற்கு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்ககார எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். பல மொழி அறிவுடன், சகோதர இனங்களுடன் ஐக்கியத்தை ஏற்படுத்தும் பணிகளை பாடசாலைகளில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் வாசுதேவ, 

சிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் இருப்புக்கு நல்லிணக்கம் என்பது முக்கியமானது. மூன்று மொழிகளின் பணியாற்றுவதன் மூலம் இந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். எனவும் இலங்கையின் பிரதான மொழிகள் சிங்களமும், தமிழுமாகும். இந்த இரண்டு மொழிகளை கற்பதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் வாசுதேவ கூறியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.