பாடசாலை மாணவிகளுக்கு ஒவ்வாமை குறித்து டாக்டர் ராம்ரூபன் விளக்கம்..!
(ஜே.எம்.ஹபீஸ்)
பாடசாலை மாணவிகள் திடீர் சுக வீனத்திற்குக் காரணம் ஒருவகையான 'ஸ்டீரியா' கூட்டு மன நோயாக ((Mass hysteria) இருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர்.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மனோவியல் வைத்திய நிபுணர் டாக்டர். ராம் ரூபன் இதுபற்றிக் கூறுகையில்,
இவ்வாறான சந்தர்ப்பங்கள் வெளிநாடுகளில் அதிகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஒருவருக்கு ஏதேனும் காரணத்தால் ஏற்பட்ட ஒரு உபாதையை தனக்கும் ஒப்பாக்கிக் கொள்வதுதான் அதன் இயல்பாகும்.
அனேகமாக இளமைப் பருவத்திலுள்ள அல்லது கட்டிளமைப் பருவத்திலுள்ள பெண்களே இப்படியான மன நிலைக்கு ஆளாவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் அதே பாடசாலையில் உள்ள ஆசிரியர்கள் பாதையில் செல்வோர் போன்ற பலரும் இவ்வாறு பாதிக்கப் படின் அது ஏதாவது ஒரு புறக்காரணி காரணமாக இருக்க முடியும்.
எனவே குறிப்பிட்ட ஒத்த வயதை உடையவர்ளான கட்டிளமைப் பருவத்திலுள்ள பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கொண்டு அவ்வாறான மன நோயாக இது இருக்கலாம் என அனுமானிக்க முடிவதாகவும்தெரிவித்தார்.
இருப்பினும் இது பற்றி மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நோய் பற்றி மாணவர்களுக்கு விளக்கமளிப்பதன் மூலம் இதை தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கம்ளை, பன்சலதென்ன, பலங்கொடை, நுகவெல ஆகிய இடங்களில் கடந்த இரு தினங்களாக மேற்படி பாதிப்பிற்கு மாணவர்கள் உட்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment