டிஜிடல் கதையாக்கத்தினூடாக கலாசார உணர்திறன் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவித்தல்
இலங்கையைப் பொறுத்தமட்டில், பாடசாலை மாணவர்களிடத்தில் கலாசார புரிந்துணர்வையும் பன்முகத்தமையை ஏற்றலும் பற்றிய அறிவு குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது. பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டில் ஏனைய சமூகத்தினர் பற்றிய நோக்கும் புரிதலும் எப்பொழுதும் எதிர்மறையானதாகவே காணப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களிடையே கலாசார உணர்திறன் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவித்தலுக்காக டிஜிடல் கதையாக்கம் (Digital Storytelling) சிறந்த கருவியாக பயன்படுத்தப்படவுள்ளது. பதுளை மாவட்டதிலுள்ள மூவின பாடசாலைகளான பதுளை மத்திய கல்லூரி, சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம், அல் அதான் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிலிருந்து தலா 6 மாணவர்கள் வீதம் மொதம் 18 மாணவர்கள் இப்பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகள் தற்போது பதுளை நெனசல மத்திய நிலையத்தில் வழங்கப்படுகின்றது. இப்பயிற்சிநெறியின் இறுதியில் கலாசார உணர்திறன் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் 10 டிஜிடல் கதையாக்கங்கள் உருவாக்கப்படவுள்ளன.
இப்பயிற்சிநெறியானது, நீலன் திருச்செல்வம் நம்பிக்கைப் பொறுப்பின் அனுசரனையில், இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியளாலர் மன்றம் மேற்கொள்கின்றது.
Post a Comment