Header Ads



முஸ்லிம் தேசியத்தின் அபிலாஷைகளை தமிழர்கள் சரிவர புரிந்துகொள்ள வேண்டும் - தவம்


(எஸ்.அன்சப் இலாஹி)

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதற்கு பின்னர், சம்மாந்துறையில் நிகழ்ந்த நிகழ்வொன்றில் நான் கூறியவற்றை திரிவுபடுத்தி, யாதார்தத்தை மூடி மறைக்கும் தந்திரோபாய அரசியலை சிலர் செய்கின்றார்கள். இதனை தமிழ் முஸ்லிம் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள் என நான் திடமாக நம்புகிறேன் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் தெரிவித்தார். 

அக்கரைப்பற்று கடற் தொழிலாளர்களுடனான கூட்டமொன்று நேற்று மாலை அக்கரைப்பற்று பதுர் நகர் மீனவர் ஓய்வு மண்டபத்தில் இடம் பெற்ற போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

இன்று நாம் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவர் மீன்பிடி அமைச்சராக இருப்பதனால்தான், நமது கடற் தொழிலாளர்களுக்கு அவ்வமைச்சினூடாக செய்யக் கூடிய விடயங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இதற்கு வழி சமைத்தவர் நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்  நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்கள்தான் என்பதை நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். இதற்காக அவர் எதிர் கொண்ட நெருக்குவாரங்களும் விமர்சனங்களும் கொஞ்சமல்ல.

விமர்சனங்களை எமது தலைவர் ரஊப் ஹக்கீம் எப்போதும் பெறும் மனங்கொண்டு ஏற்றுக் கொள்ளும் தன்மையுள்ளவர். சமூக நன்மைக்காக எடுக்கும் தீர்மானங்களில் இரு கருத்துக்கள் இல்லாமல் இருக்க முடியாது என்பதை மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருப்பவர். அவருக்கு நிகர் யாருமில்லை. அவ் வழியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் புதிய தலைமுறையும் அப்படிப்பட்ட விமர்சனங்களை மிக சாதூர்யமாகக் கையாளக் கற்றுக்கொண்டுள்ளது. அதனால், பண்பட்ட, புடம் போடப்பட்ட போராளிகளைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் முழுப் பரிமானங்களுடனும் நிமிர்ந்து வருகிறது.

அந்த வகையில்தான், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதற்கு பின்னர், சம்மாந்துறையில் நிகழ்ந்த நிகழ்வொன்றில் நான் கூறியவற்றை திரிவுபடுத்தி, யாதார்தத்தை மூடி மறைக்கும் தந்திரோபாய அரசியலை சிலர் செய்வதையும் நான் பார்க்கின்றேன். இதில் உள்ள சூழ்ச்சியை தமிழ் முஸ்லிம் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள் என நான் திடமாக நம்புகிறேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடு சேர்ந்து ஆட்சியமைத்தது தொடர்பில் பேசும் போது, முஸ்லிம் தேசியமும் தமிழ் தேசியமும் இணைந்து பணியாற்றுவதற்கு தமிழ் தேசியமும் திறந்த மனதோடு இறுதி தீர்வில் முஸ்லிம்களுக்கு என்ன அந்தஷ்தைத் தரப்போகிறது என்பதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் அது வரைக்கும் இரண்டு தேசியங்களும் இணைந்து பணியாற்ற முடியாது எனக் கூறினேன். இது யதார்த்தம். இது முஸ்லிம் தேசியத்தின் அரசியல் அபிலாஷை. இதில் என்ன தவறு இருக்க முடியும்.

சிங்கள தேசியம் தமிழ் தேசியத்தின் அபிலாஷைகளை சரிவரப் புரிந்து கொள்ளாமையும் அதனை திருப்திப்படுத்த திறந்த மனதோடு பணியாற்ற முன் வராமையும்தான் இன்றைய நிலைக்கு காரணம் என்பதனை யாரும் மறுக்க முடியாது. அதே போன்று நுணிப்புல் மேய்வதைப் போன்றில்லாமல் முஸ்லிம் தேசியத்தின் உண்மையான அரசியல் அபிலாஷைகளை  தமிழ் தேசியம் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பேசியதை எந்த வகையில் தவறாகும் என்பதை மீண்டும் கேட்க விரும்புகிறேன். ஒரு பிரச்சினையை செவிமடுப்பதே அந்தப் பிரச்சினைக்கான பாதித் தீர்வாக அமையும் என்பார்கள். முஸ்லிம் தேசியத்தின் ஆன்மாவில் நான் பேசிய விடயம் ஆழமாக பதிந்துள்ளது என்பதனை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது பற்றிப் பேச முன் வர வேண்டும். அப்போதுதான் இரண்டு தேசியங்களும் இணைந்து தோளோடு தோள் நின்று எல்லா விடயங்களிலும் உடன்பட்டு பிரயாணிக்க முடியும் என்பதனை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என தன்னுரையில் அவர் தெரிவித்தார்.  

2 comments:

  1. Eppo intha Poraali enum sol Sri Lanka vil paavikkap padumo avarkal poondodu alivaarkal enbathu LTTE alivil irunthu oru paadam dooi ......

    ReplyDelete
  2. நல்லாதான் பேசுரங்க எப்பயும் அதத்தானெ பெசுரங்க

    ReplyDelete

Powered by Blogger.