Header Ads



டுபாயில் விசா இல்லாமல் தங்கியுள்ளவர்களின் கவனத்திற்கு..!


ஐக்கிய அரபு எமிரேட்டில் (யு.ஏ.இ.,), விசா காலம் முடிந்தும் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள், தங்கள் விசாவைப் புதுப்பித்துக் கொள்ள, அந்நாட்டு அரசு இரண்டு மாதம் அவகாசம் அளித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில், ஏராளமான வெளிநாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில், பலர் விசா காலம் முடிந்த நிலையில், சட்ட விரோதமாகத் தங்கியுள்ளனர். இவர்கள், தங்கள் விசாவை புதுப்பித்துக் கொள்வதற்காக, அந்நாட்டு அரசு சலுகை அளித்துள்ளது.

கடந்த, 2007ம் ஆண்டும், இதே போன்ற சலுகை அளிக்கப்பட்டது. அப்போது, விசா முடிந்து, சட்ட விரோதமாகத் தங்கியிருந்த, 3.5 லட்சம் பேர், இந்தச் சலுகையைப் பயன்படுத்தி, விசாவைப் புதுப்பித்துக் கொண்டனர். மற்றவர்கள், அபராதம் இல்லாமல், தாயகம் திரும்பி விட்டனர். "விசா காலம் முடிந்தவர்களுக்கு மட்டும் தான் இந்தச் சலுகை. சட்ட விரோதமாகக் குடியேறியவர்களுக்கு, இந்தச் சலுகை கிடையாது. அவர்கள் கிரிமினல்களாக தான் கருதப்படுவர்' என, ஐக்கிய அரபு எமிரேட் அரசு தெரிவித்து உள்ளது.

No comments

Powered by Blogger.