Header Ads



குடியிருந்த வீட்டை மீண்டும் வழங்க மறுப்பது நியாயமா..? கேட்கிறார் அமைச்சர் றிசாத்


(மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்துக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்க மறுத்தமைக்கு எதிராக நீதி கேட்டு போராடியதாக ஆரம்பித்த யுத்தம் பின்னர் அது திசைமாறி வேறு எதிர்பார்ப்புக்களை அடைய முற்பட்டமையினால் ஏற்பட்ட இழப்புக்கள் ஏராளம். அன்று அவ்வாறு போராடியவர்கள் தாங்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துக் கொண்டு தனக்கு கீழிலிருந்த ஒரு சிறுபான்மை சமூகத்தை அச்சுறுத்தி வெளியேற்றியமைக்கு கற்பிக்கும் நியாயங்களை நாம் எவ்வாறு அங்கீகரிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத்  பதியுதீன்,இதன் மூலம் சகலரும் பெரிதும் பாதிப்புக்களை சந்தித்ததாகவும் கூறினார்.

இடம் பெயர்ந்து மீள்குடியமர்ந்தவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் பிராந்திய அபிவிருத்தி தொழில் உதவி திட்டத்தின் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களை கையளிக்கும் வைபவம் மன்னார் விவசாய பயிற்சி நிலையத்தில் இன்று இடம் பெற்றது.
அவுஸ்திரேலிய நாட்டின் நிதி உதவியின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முகாமைத்துவத்தின் கீழ் வடமாகாண விவசாய அமைச்சு இத்திட்டத்தினை நடை முறைப்படுத்திவருகின்றது.

இதற்கென 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக அவுஸ்திரேலியாவின் ஒஸ்ட்ரியா நிறுவனம் வழங்கியுள்ளது.நீர் இரைக்கும் இயந்திரம் -210,தெளி கருவி -943,தள்ளளுவண்டி-475 என்பன இன்றைய வைபத்தின் போது பயனாளிகளுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீனினால் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றும் போது கூறியதாவது,

அதே போல் பெரும்பான்மையாக இருக்கின்ற நாங்கள் ஏனைய மதத்தவர்களை மதிக்கின்ற ,மனித நேயத்துடன் பார்க்கின்ற நல்ல பண்புகளை கொண்டிருக்க வேண்டும்.அவர்களது உரிமைகளை வழங்குகின்றவர்களாக வாழ வேண்டும். துன்பம் என்கின்ற  ஒன்று வருகின்ற போது அது கத்தோலிக்கர்களாக,இஸ்லாமியர்களாக ,இந்துக்களாக என்று பார்த்துவருவதில்லை.அது மனிதனுக்கு பொதுவாக வருகின்ற தென்று  என்று பார்த்து அவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

எந்தவொரு மதமும் மனிதாபிமானத்துக்கு எதிராக ,இனவாத ரீதியாக,மதவாத ரீதியாக,அரசியல் ரீதியாக நோக்குமாறு கூறவில்லை.மாறாக எந்த மதமாதக இருந்தாலும் அவைகள் மக்கள் துன்பங்களை களைவதற்கு உதவி செய்யுமாறு தான் கூறி நிற்கின்றது.இந்த வன்னி மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் தலைவராக கடந்த 9 வருடத்துக்கு மேலாக நான் இருந்து வருகின்றேன்.என்னிடம் அபிவிருத்தி திட்டங்களை சமர்பிக்கும் போது,அதில் எவ்வித இனவாதமோ,பிரதேச வாதமோ காட்டாமல் அதற்கான அனுமதியினை வழங்கி வந்துள்ளேன்.

ஒருவரது வீட்டில் இன்னொருவர் தற்காலிகமாக வந்து குடியமர்ந்திருக்கின்றார்.ஆனால் வீட்டின் உரிமையாளர் வந்து தமது வீட்டை தருமாறு கேட்கின்றார்.அப்போது அங்குள்ளவர்கள் அவருக்கெதிராக வீராப்பு பேசி அதனை வழங்க மறுப்பது என்ன நியாயம்,அது மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட வீட்டின் உண்மையான உரிமையாளருக்காக நியாயம் கேட்டு பேசினால்,அதனை இனவாதமாக,மதவாதமாக சித்தரித்து,அதன் மூலம் சமூக உறவை சிரழிக்கும் வேலையினை செய்வதோடு,இன உறவை பேன முயற்சிப்பவர்களை இனவாதியாக காண்பிக்கும் பணியினை சிலர் எமது மாவட்டத்தில் தொடராக செய்துவருகின்றனர்.

இன்று பயங்கரவாதம் இந்த மண்ணிலிருந்து ஒழிக்கப்பட்டுள்ளது.மக்கள் அச்சமற்ற சூழலில் வாழும் நிலையினை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,இன்று யுத்தம் முடிந்த நிலையிலும்,மீண்டும் இந்த மண்ணில் சமாதானத்தை குழப்பி ஒரு யுத்த சூழலை ஏற்படுத்தலாம் என்று சிலர் செயற்படுகின்றனர்.அவர்களது கனவு ஒரு போதும் நனவாகாது என்பதை ஜனாதிபதி தெளிவாக தெரிவித்துள்ளார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வடமாகணத்தி்ன் அபிவிருத்திகளுக்கென கடந்த 3 வருட காலத்திலும் சுமார் 2000 கோடி ரூபாய்களை ஜனாதிபதி ஒதுக்கி தந்து பல்வேறு அபிவிருத்திகளை மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளா்.அந்த திட்டங்களை இங்கு கொண்டுவருவதில்,அதற்கான அனுமதியினை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது நான் எவ்வித குறுகிய நோக்கமும் இன்றி நேர்மையாக வழங்கியுள்ளேன்.இதன் 5லம் சகல மக்களும் இதனது நன்மையினை அடைந்துள்ளார்கள்.ஆனால் இந்த பணியினை செய்கின்ற அரசாங்த்துக்கு நன்றியுள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும்.இவ்வளவு உதவிகளையும் பெற்றுக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேசத்துக்கு பிழையாக ,பொய்யான தகவல்களை கூறி,மீண்டும் இந்த மக்களை அழிவுக்கு இட்டுச் செல்லும் சதிகளை செய்யும் சக்திகளின் வலைகளில் சிக்கிவிடாது மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளவிரும்புகின்றேன்.

தேர்தல் வருகின்ற போது.நீங்கள் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாம்,விரும்பிய கட்சியினை ஆதரிக்கலாம்,அது ஜனநாயக நாட்டின் அடிப்படை உரிமை,ஆனால் ஆயுதத்தை வைத்தும்,ஆயுதக் கலாசாரத்தை காண்பித்து அச்சுறுத்தி அன்று மக்களது வாக்கு அபகரித்தது போன்று தற்போது செய்ய முடியாது என்பதை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது மாவட்டத்துக்கு வருகின்ற அபிவிருத்திகளை அற்ப சொற்ப அரசியல் லாபங்களுக்காக தடுத்து நிறுத்தும் துரோகத்தை செய்யாதீர்கள்.எமது மாவட்டம் பல துறைகளிலும் முன்னேற வேண்டும்,விவசாயத்துறை.கல்வித் துறை,பொருளாதார துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும்,ஏனைய மாவட்டங்களை விஞ்சும் அளவுக்கு நாம் முன்னேற வேண்டும்.

அதே போன்று எமது மாவட்டத்தில் உள்ள ஊடகவியலளார்களுக்கும் தார்மீக பொறுப்பு இருக்கின்றது.மாவட்டத்தின் அபிவிருத்திக்கும் அவர்களது திறமைகளை பயன்படுத்த,உண்மையினை சரியாக கண்டறிந்து அவற்றை தங்களது ஊடகங்களில் பிரசுரிக்க வேண்டும். என கேட்டுக் கொள்வதகாவும் அமைச்சர் றிசாத் பதியுதின் தெரிவித்தார்.

வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.ஹால்தீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசகரும்,முன்னால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரமான எஸ்.குரூஸ்,மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டென்லி  டிமெல்.வடமாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன,வடமாகாண ஆளுநரின் ஆணையாளர்களான எஸ்.எல்.டீன்,ஷாஹிப் மொஹிதீன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.







No comments

Powered by Blogger.