அஸ்வர் அநீதி இழைப்பு - சபாநாயகரிடம் முறையிட்டார் ரணில்
நாடாளுமன்ற அவை தலைமையால் எதிர் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று 20-11- 2012 நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
எதிர் கட்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் உரையாடுவதற்கு மேலதிக ஐந்து நிமிடங்களை வழங்க, அவைக்கு தலைமை தாங்கிய நாடாளுடன்ற உறுப்பினர் ஏ எச் எம் அஸ்வர் இடமளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் உரையின் போது, தமது பெயரை குறிப்பிட்டு பல்வேறு பட்ட கருத்துக்களை முன்வைத்தாகவும் எதிர் கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு பதிலளிக்க நிலையியல் கட்டளைச் சட்டத்திற்கு அமைய தமக்கு சந்தர்ப்பம் இருந்த போதிலும், அவைக்கு தலைமை தாங்கிய ஏ. எச். எம் .அஸ்வர் இடையூறு விளைவித்தாகவும் ரணில் விக்மரசிங்க குறிப்பிட்டார்.
Post a Comment