காத்தான்குடியில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி ஏற்பாட்டில் கருத்தரங்கு
(எப்.எம்.பர்ஹான்)
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னனியின் ஏற்பாட்டில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினால் கொண்டுவரப்பட்ட 1325 பிரேரணையைக் கருவியாகக் கொண்டு பெண்களின் பாதுகாப்பு 'அபிவிருத்தி மற்றும் சமாதானம் என்பன பற்றியும் இதனுடன் தொடர்புபட்ட இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகள் பற்றியும்' எடுத்து விளக்கவும் சமூகத்தின் திறன் ஆற்றலை மேம்படுத்தி பரிந்துரை செய்வதற்கான இரண்டு பயிற்சிப்பட்டரையின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை காத்தான்குடி நகர சபை பொது நூலக கேட்போர் கூடத்தில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னனியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சிரேஸ்ட நிகழ்ச்சிதிட்ட இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல் தலைமையில் நடைபெற்றது.
இன்ற கருத்தரங்கின் வளவாளர்களாக சட்டத்தரணி எல்.எல்.பி.மர்சூக் அஹமட்'பேறுவலை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் விரிவுரையாளரும்'ஆய்வாளரும் 'ஊடகவியலாளருமான ரவூப் சேன் ஆகியார் விரிவுரைகளை நிகழ்த்திவருகின்றனர்.
இன்றைய நாள் நிகழ்வில் ஆறுசுயுகு பற்றிய அறிமுகம் 'பால் பற்றிய புரிந்துணர்வு 'பால்நிலை பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்'ஐக்கிய நாடுகளின் கோட்பாடு முறை விளக்கம்'ஊநுனுயுறு பற்றிய விளக்கங்கள் 'அரசுடன் அதற்குள்ள இணைப்பு பற்றி ஆராய்தல்' ஊநுனுயுறுவும் இலங்கையின் நிலைப்பாடும் -குழச் செயற்பாடு 'இஸ்லாத்தில் 'சரியாவில் பெண்களி நிலை பற்றி விபரணம் பற்றி பல்வேறு தலைப்புக்ளில் விரிவுரைகள் நிகழ்த்தப்படவுள்ளன.
இக்கருத்தரங்கில்; நாவல் ஆசிரியர் சாலிஹா சித்தீக்' முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னனியின் தலைமையக சிரேஸ்ட நிகழ்ச்சிதிட்ட இணைப்பாளர்களான லைலா உடையார் 'நலீரா சாலி'பெண் ஊடகவியலாளர் சர்மிலா இம்தியாஸ்'மற்றும் சிரேஸ்ட 'இளம் ஊகவியலாளர்கள் மதப் பெரியார்கள் அரச'அரச சாற்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் 'மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Post a Comment