காஸா முஸ்லிம் உறவுகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்திற்கு இஹ்வான் முஸ்லிம் அழைப்பு
எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி, இஸ்ரேலுக்கான எகிப்து தூதுவரை திரும்ப அழைத்துக் கொண்டார். இஸ்ரேல் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்ட அதவ் மொஹமட் சலம்மை நாடு திரும்பும்படி மொஹமட் முர்சி உத்தரவிட்டிருப்பதாக எகிப்து தேசிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
அதேபோன்று எகிப்தின் இஸ்ரேலுக்கான தூதுவரையும் வெளியேறும்படி மொஹமட் முர்சி கோரியுள்ளார். இது தவிர இஸ்ரேல் காசா விவகாரம் தொடர்பில் அவசர கூட்டத்தை நடத்து மாறும் ஐ. நா. பாதுகாப்புச் சபையை மொஹமட் முர்சி கோரியுள்ளதோடு அரபு லீக்கிற்கு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலத்திலும் இஸ்ரேலின் லெபனான், பலஸ்தீன தாக்குதல்கள் இடம்பெற்ற 1982, 1988, 2001 மற்றும் 2005ஆம் ஆண்டுகளிலும் இஸ்ரேலுக்கான எகிப்து தூதுவர்கள் மீள அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எகிப்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சி போராட்டத்தை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையிலான உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பும் இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு இன்றைய வெள்ளிக்கிழமை தினத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் அழைப்புவிடுத்துள்ளது.
Post a Comment