Header Ads



பாட்டு சத்தத்தை குறைக்கவில்லையாம் - நடந்தது ஒரு கொலை


பாட்டு சத்தத்தை குறைக்கும்படி கூறியபோது ஏற்பட்ட தகராறில் கறுப்பின வாலிபரை சுட்டு கொன்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் ஜாக்சன்வில் நகருக்கு, மைக்கேல் டன் (45) என்ற தொழிலதிபர் ஷாப்பிங் செய்ய வந்திருந்தார். ஒரு கடையில் மனைவியுடன் பொருட்களை வாங்கி கொண்டிருந்தபோது, காதை கிழிக்கும் அளவுக்கு பாட்டு சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை பார்த்தபோது, கார் ஸ்டீரியோவில் சத்தமாக பாட்டு வைத்து சில கறுப்பின வாலிபர்கள் கேட்டு கொண்டு இருந்தனர். 

வாலிபர்களை நோக்கி சென்ற டன், பாட்டு சத்தத்தை குறைக்கும்படி கூறினார். வாலிபர்கள் மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்தார். இதை பார்த்த டன், துப்பாக்கியை பிடுங்கி சரமாரியாக வாலிபரை நோக்கி 10 முறை சுட்டார். குண்டுகள் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்ற வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.  சம்பவத்துக்கு பிறகு டன் அங்கிருந்து தப்பினார். ஆனால் கண்காணிப்பு கேமரா மூலம் அவரை போலீசார் பிடித்தனர். இறந்த வாலிபர் பெயர் டேவிஸ் என்பது தெரிந்தது. கைது செய்யப்பட்ட டன், வெள்ளை இனத்தை சேர்ந்தவர் ஆவார்.

No comments

Powered by Blogger.