Header Ads



திருமண பந்தத்தில் நம்பிக்கையற்ற பெண்கள் - ஆய்வில் தகவல்


ஆண்களை விட பெண்களுக்கு, திருமண பந்தத்தில் நம்பிக்கை குறைவாக இருப்பது, பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக, திருமண பந்தத்தில் பெண்களுக்கு தான் அதிக நம்பிக்கை இருக்கும் என்றாலும், தற்போது அந்த நிலை மாறி வருகிறது. இதுகுறித்து, பிரிட்டனில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு நகரங்களில், 21 வயதுக்குட்பட்ட, 1,200 பெண்களிடமும், 600 ஆண்களிடமும் நடத்தப்பட்ட ஆய்வில், ஐந்தில் ஒரு பெண் மட்டுமே திருமணம் செய்து கொள்வதை முக்கியமாகவும், மூன்றில் ஒரு பெண் மட்டுமே, திருமணமான தம்பதியரே நல்ல பெற்றோர்களாக இருப்பர் என்றும் கருதுவதாக கூறியுள்ளனர்.

ஆண்களில், 56 சதவீதம் பேர், திருமணத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், 46 சதவீதம் பெண்கள் மட்டுமே திருமண பந்தத்தில் நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளனர்."திருமண பந்தத்தின் மேல், தங்களுக்கு மதிப்பு இருந்தாலும், அதை வெற்றியின் அடையாளமாக பார்ப்பதில்லை' என, பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஐந்தில், மூன்று பெண்கள், தன்னம்பிக்கையோடும் சுதந்திரமாகவும் இருப்பதையே வெற்றி என்று கருதுகின்றனர். 

ஆனால், பாரம்பரியமான குடும்ப வாழ்க்கையில் இருக்கும் நன்மைகளை உணர்ந்த பெண்களும் இருக்கின்றனர். "திருமணம் செய்து குழந்தையோடு வாழும் பெற்றோருக்கு கிடைப்பதை விட, ஒரே பாலினத்தை சேர்ந்த பெற்றோர், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் பெற்றோர், ஆகியோருக்கு சமூகத்தில் குறைந்த மதிப்பே கிடைக்கிறது' என, 10ல் ஏழு பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


No comments

Powered by Blogger.