Header Ads



பொலிஸ் அதிகாரி இப்றாஹீம் காலமானார்


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றி்சாத் பதியுதீனின் பிரதம பாதுகாப்பு அதிகாரியான பொலீஸ் அதிகாரி  முஹம்மத் இப்றாஹீம் ஜூனைதீன் இன்று வியாழக்கிழமை(2012.11.08) காலமானார்.திடீர் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பிறகு வபாத்தானார்.

மர்ஹூம் ஜூனைதீன்  1988.8.25 ஆம் திகதி பொலீஸ் சேவைக்குள் நுழைந்து களுத்துறை பொலீஸ் பயிற்சி கல்லுாரியில் தமது பயிற்சியினை நிறைவு செய்து கொண்டவராவார்.அதன பிறகு நீர்கொழும்பு,பாணந்துறை,மட்டக்களப்பு,பதுளை,அம்பாறை, எல்பிட்டிய பொலீஸ் நிலையங்களில் பணியாற்றி இவர். 2002 ஆம் ஆண்டு முதல் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவில் இணைந்து கொண்டார்.

கடந்த 6 வருடகாலமாக அமைச்சர் றிசாத் பதியுதீனின் பிரதம பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிவந்துள்ளார்.நான்கு பிள்ளைகளின் தந்தையான மர்ஹூம் ஜூனைதீன்,அமைச்சரின் பாதுகாப்பு விடயங்களில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளை தமது பிரதம பாதுகாப்பு அதிகாரியின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டதும்,தாம் பெரும் கவலையடைந்துள்ளதாகவும்,மிகவும் பொறுமையான முறையில் எப்போதும் பணியாற்றக் கூடிய நல்லதொரு சகோதரரை தாம் இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,அன்னாரின் சுவன வாழ்வுக்கு பிரார்த்திப்பதாகவும்,அவரது துயரால் துயருரும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த கவலையினையும் தெரிவிப்பதாக வெளியிட்டுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.