Header Ads



"முஹம்மதின் படை தோற்பதில்லை"


                                                                             
                                                                            (FAJI)



உன் ஆயுதங்களுக்கு போர் நாகரீகத்தைதை
கற்றுக்கொடுக்க  தவறிவிட்டாய் 
உன்   அறிவில் குருதிவெறி நிரம்பிக்கிடக்கிறது 
உன் இலக்கு எம் இனத்தை கொன்றொழிப்பதுதான் 

நீ பெற்றது நிரந்தர வெற்றியுமல்ல 
நாம் பெறுவது நிரந்தர தோல்வியுமல்ல 
இது இறைவனால் நிர்ணயிக்கபட்ட ஆட்டம் 
சிரம் பணியும் இடங்களை தகர்த்தெறிவதால் 
அல்லாஹ் வெட்கித்து தலை குனிவதில்லை

விரோதிகளை அழிப்பது இறைவனுக்கு இமைபொழுது 
மிக அதிகமானது 
எம் இனத்தின் உலமாக்களுக்கும் உமறாக்களுக்கும் 
ஒரு சோதனை 

ஏகத்துவவாதியையும் உலகத்துவவாதியையும் பிரித்தறிய 
இறைவனின் பலப்பரீட்சை 
இஸ்லாம் தீவிரவாதம் என்றால் இன்று நீ இல்லை 
உனக்கொரு தேசம் இல்லை 

வீர வாரிசுகளால் பூமி நிரம்பியிருக்கும் 
ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்னரே  உமது சரித்திரம் 
சமாதியாகி இருந்திருக்கும் 

இஸ்லாம் என்பது சாந்தி 
உன் அநாகரிகத்தை இதுதான் மிகைத்து நிர்க்கின்றது 
ஆயினும் முஹம்மதின் படை தோற்பதில்லை 

விரைவில் முஹம்மதின்  படை நோக்கும்
இவர்களின் பாசையில் போராட்டம் என்பது
போரில் எதிரியை "ஆட்டம்" காண செய்வதுதான்

உன் அதிகார வெறியின் கடைசி மூச்சு தொலைவிலில்லை 
அக்கினி குண்டுகளுக்கு அடிபணிய மறுத்து 
அசத்திய சாம்ராஜியத்தை துகளாக்கும் வீரமுழக்கம் 
உன் செவிகளைநோக்கி வருகிறது 

முஹம்மதின் படைக்கு மரணம் சுவையானது 
அணுகுண்டும் தீக்குச்சியின் புகை போலதான் 
அங்கு வீசுவது உன் போன்று  பிண வாடை அல்ல 
சொர்க்கத்தின் மண வாடை 

விளை நிலத்தில் களைகள் பிடுங்கப்படும்போது 
சில பயிர்களும் சேதம் அடைவது போல 
எம் இனத்தின் மரணத்தில் உன் வெற்றி தீர்ப்பை 
எழுதிவிட முடியாது 

இருதயம் நிலைகுலையாத முஹம்மதின் படைக்காய் 
நீ தயாராகு 
எமது கணத்தாக்கம் சோடியமும் பொட்டாசியமும் அல்ல 
அல்லாஹுவும் முஹம்மதுமாகும்

இன்னும் அல்லாஹுவின் படைப்புக்கள் 
அவன் கட்டளைக்கு செவி சாய்த்து கொண்டது
உலக வரைபடத்தில் உன் நேச  தேசங்கள் 
அழியும் நாட்களும் தூரம் இல்லை 

உனது வரலாறு அழிக்கப்பட  வேண்டியது அல்ல 
திருத்தி எழுதப்படவேண்டியது 
முதற்பக்கத்தில் எழுதிக்கொள் "முஹம்மதின் படை தோற்பதில்லை" 






3 comments:

  1. மாஷா அல்லாஹ், நிச்சயமாக உலகத்த்துவ வாதியும் இஸ்லாமியவாதியும் பிரித்தறியும் தருணம் இதுவே..

    செய்தியும் போட்டோவும் பார்க்கும் போது மட்டும் கவலைப்படும் நம் சமுதாயம் சற்றே நேரத்தில் சினிமா செய்தியில் கவலை தொலைக்கிறது..

    மிக சிறந்த வரிகள்.. " முஹம்மதின் படைகள் தோற்பதில்லை"

    இன்ஷா அல்லாஹ்..

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்! "முஹம்மதின் (ஸல்) பாதையில் போராடும் படைகள் தோற்பதில்லை". இஸ்ரவேலின் அடாவடித்தனம் இஸ்லாமிய படையை நிலைகுலையச் செய்யும் என்று மனப்பால் குடித்தால் அது இஸ்ரவேலர்களினதும், அமெரிக்கர்களினதும் மிகப்பெரிய மடத்தனம். உங்களது அடாவடித்தனங்கள் எங்களது பாதங்களை உறுதிப்படுத்தும். எமது உம்மத்தை அல்லாஹ்வின் பாதையில் ஒன்றுதிரட்டும் சக்தியாக அது மாறும் இன்ஷா அல்லாஹ். அந்த நாளுக்காக நாம் காத்திருப்போம். அப்போது நீ பாலஸ்தீனர்களை மட்டும் களத்தில் காணமாட்டாய். தூர கிழக்கில் இருக்கும மலேசியனும், இந்தோனிசியனும் நானும் இன்னும் உலகம் பூராவுமுள்ள இஸ்லாமியவாதிகள் உண்னை துவம்சம் செய்ய ஒன்று திறழ்வாரகள் அந்த நாளைப்பயந்து கொள்ளுங்கள் இஸ்ரவேலர்களே.

    ReplyDelete

Powered by Blogger.