Header Ads



புத்தளம் மாவட்டத்தின் முதல் முஸ்லிம் பாடசாலை புளிச்சாக்களம் உமர் பாரூக் ம.வி.



2013 பெப்ரவரி 17 ந் திகதி  நூற்றான்டு கொண்டாடும் புத்தளம் புளிச்சாக்களம் உமர் பாரூக் மஹா வித்தியாலயம் 1913 ம் ஆண்டு பெப்ரவரி 17  ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை ஆகும். ஆரம்பிக்கும் போது அதன் பெயர் 'அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர் தொகை 30. அதிபர் எம். ஆல்பிரட் ஆவார்கள். 

நெருங்கும் நூற்றான்டுக்குள் 36 பட்டதாரிகளையும் 25 பயிற்றப்பட்ட ஆசிரியர்களையும் (கல்வியல்கல்லூரி), மேலும் 15 ஆசிரியர்களையும், கிராம சேவகர்கள், வங்கி ஊழியர்கள்.சுங்க அதிகாரிகள்,தபால் அதிபர் என்று பலரையும் உருவாக்கி உள்ளது.. முன்னால் புத்தளம் உதவிக் கல்விப்பணிப்பாளர் (ஆரம்பபிரிவு) அல்ஹாஜ் சுபைர், தற்போதைய உதவிக் கல்விப்பணிப்பாளர் (தமிழ்) அல்ஹாஜ் அபுல்ஹுதா, சாஹிரா பாடசாலை முன்னால் அதிபர் மர்ஹூம் ஜலால்தீன் மரைக்கார் ஆகியோரும் இப்பாடசாலையில் கற்றவர்கள் என்பது குறிப்பிடதக்கது. 

இப்பாடசாலையிலே கற்று அதிபர்களாக மர்ஹும் அல்ஹாஜ் முத்தலிப், மர்ஹும் அல்ஹாஜ் சம்சுதீன்,  அல்ஹாஜ் மொஹிதீன், அல்ஹாஜ் மசூத், அல்ஹாஜ் சஹாப்தீன், இன்று  பாரி ஆகியோர் கடமை புரிவது பெருமைக்குரியது.


1956ஆம் ஆண்டு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையாகவும், 1963ஆம் ஆண்டு மகா வித்தியாலயமாகவும், தரமுயர்த்தப்பட்ட இப்பாடசாலை 1963ஆம் ஆண்டு காலப்பகுதியில் கல்வி அமைச்சராக இருந்த மர்ஹும் பதியுதீன் மஹ்மூத் அவர்களால் உமர் பாரூக் மஹா வித்தியாலயம் என பெயர் சூட்டப்பட்டது.

தற்போது மொத்த மாணவர் தொகை 994 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 521 பெண்கள் 473 ஆகும். 994 மொத்த மாணவர்களில் 74 மாணவர்கள் இந்து சமய மாணவர்கள். 

ஆசிரியர்கள் மொத்தம் 41 பேர் கடமை புரிகின்றனர். இதில் 12 ஆண் ஆசிரியர்கலும், 29 பெண் ஆசிரியைகளும் உள்ளடங்கும். இந்த பாடசாலையில் கற்று தற்போது இந்த பாடசாலையில் ஆசிரியர்களாக 25 பேர் கடமை புரிவது குறிப்பிடத்தக்கது.

65-20 கட்டிடம் ஒன்றோடு மாத்திரம் ஆரம்பித்த இப்பாடசாலை தற்பொழுது வாசிகசாலை, கனணி பயிற்சி அறை, சிற்றுண்டிசாலை,மஸ்ஜித், காரியாலயம், 100ஒ20 வகுப்பறை,80ஒ20 வகுப்பறைகளில் 04ம், 60ஒ20வகுப்பறை   என 12 கட்டிடங்களை கொண்ட பாடசாலையாக  காணப்படுகிறது.மின்சார வசதி,குடிநீர் வசதி, தொலைபேசி வசதி, கிடைத்திருப்பது சந்தோசமான செய்தியானாலும், இன்னமும் உயர்தர மாணவர்கழுக்கான வர்த்தகபிரிவு, விஞ்ஞானபிரிவு, ஆரம்பிக்க முடியாமல் இருப்பது வருந்ததக்கது. 



தகவல் - புளிச்சாக்குளம் சியாது
புதுக்குடியிருப்பு
புத்துலு-ஒயா


5 comments:

  1. Really I am very very proud about my school.........

    I like Omer Farook very much because you were my second home......

    ReplyDelete
  2. Thodarnthu amathu school, uoor news Jafnamuslim el varavandum andru asaippaduhiran.

    ReplyDelete

Powered by Blogger.