Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வடமேல் மாகாண சபையில் ஆளும் கட்சிக்கு ஆதரவு


(அபூ நாதில்)

வடமேல் மாகாண சபை  ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவரில்  இருவர் இன்று முதல்  ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக   வடமேல் மாகாண  சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுக்களின் தலைவருமான எஸ். ஏ. எஹ்யா தெரிவித்தார். 

வடமேல் மாகாண  சபையில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக  புத்தளம் மாவட்டத்திற்காக  எஹ்யாவும்  குருநாகல் மாவட்டத்திற்காக ரிஸ்வி மற்றும் தஸ்லீம் ஆகிய இருவருமாக மொத்தம் மூன்று   உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். 

மேலும் கருத்து தெரிவித்த எஹ்யா 

வடமேல் மாகாண  சபையில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்  மூவரில் நானும் ரிஸ்வியும்  இன்று முதல் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்து ஆளும் தரப்பில் அமர்ந்து கொண்டோம்.  மற்றொரு உறுப்பினரான தஸ்லீமும் விரைவில்  ஆளும் தரப்பிற்கு ஆதரவு வழங்குவார்  என எதிர் பார்ப்பதாக எஹ்யா தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.