யாழ்ப்பாண போரா சமூகம் குறித்து கொழும்பில் மாநாடு (படங்கள் இணைப்பு)
யாழில் பாரம்பரியமாக வசித்துவந்த போரா சமூகம் மீள்குடியேற்றம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான கருத்தரங்கு கொழும்பில் இடம்பெற்றுள்ளதுடன் அதில் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக பங்குகொண்டார்.
கொழும்பு பம்பலப்பிட்டி புர்ஹானி பார்க் குட்பி மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யாழில் பாரம்பரியமாக வசித்துவந்த போரா சமூகம் குறித்த கருத்துக்களும் தகவல்களும் பரிமாறப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் யாழில் போரா சமூகம் வாழ்ந்த காலத்தையும் அவர்களுடாக யாழ். வர்த்தக நடவடிக்கைகள் அபிவிருத்தியடைந்த காலங்களையும் நினைவுகூர்ந்ததுடன் இச்சமூகத்தினர் மீண்டும் தமது வாழ்விடங்களுக்கு திரும்பி வடபகுதி வர்த்தக நடவடிக்கைகளில் பங்குபற்ற தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அமில் சாஹிப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கருத்தரங்கில் யாழ். வர்த்தக சம்மேளனத் தலைவர் கே.பூரணச்சந்திரன் பிறவுன் கம்பனி பொதுமுகாமையாளர் பண்டுக வீரசிங்க கெற் குழுமத் தலைவர் வீ.கே.கந்தள்வேல் செயினி குழுத்தலைவர் ஷேக் அப்துலலி ஜெபர்ஜீ ஆகியோரும் சிறப்புரையாற்றினார்கள்.
Post a Comment