கல்முனை ஆதார வைத்தியசாலையில் உளநல பிரிவு திறப்பு (படங்கள்)
(சௌஜீர் ஏ முகைடீன்)
கல்முனை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள உள நல பிரிவு ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியும் உள நல பிரிவுக்கான அலுவலக திறப்பு விழாவும் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் நேற்று (03.11.2012) நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், அதிதியாக கல்முனை அஸ்ரப் ஞபகார்த்த வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி டாக்கடர் ஏ.எல்.எம்.நசீர், உள நலப் பிரிவுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் ஜூ.டி.றமீஸ், தாதிமார் மற்றும் ஆதார வைத்தியசாலையில் அபிவிருத்தி குழுவினர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்.
இக்கண்காட்சியின் போது உள நல பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளினால் உருவாக்கப்பட்ட கைப்பணி பொருட்கள், தையல் வேலைப்பாடு மற்றும் மரக்கறி உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டிருந்த்து.
இதன்போது உள நல பிரிவுக்கென பிரத்தியோக அலுவலகத்தை கிழக்கு மாகாண அமைச்சர் திறந்து வைத்தார். அத்தோடு அப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் சுகநலம் பற்றி அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
Post a Comment