Header Ads



நாட்டில் சிவப்பு மழை பெய்தமைக்கு என்ன காரணம்...?

செவனகல மற்றும் மனம்பிட்டி பகுதிகளில் மழை பெய்த பின்னர் சிவப்பு நிற படிமம் காணப்பட்டமைக்கு ஒருவகை பாசி மற்றும் நுண்ணங்கியின் உயிர் பல்வகைத்துவ மாற்றமே காரணமாகும் என சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

மழை நீரின் மாதிரி பரிசோதிக்கப்பட்டதை அடுத்து அதில் உயிர் பல்வகைத்துவ மாற்றம் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், என்ன வகையான மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது குறித்து இன்னும் நிச்சயமாக கூறமுடியாதிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிவப்பு மழையின் நீர் மாதிரி கொழும்பு மருத்துவ பரிசோதனை நிலையத்தினால் நேற்று ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.
  

No comments

Powered by Blogger.