எமக்கு எதிரான சவால்களை முறியடிப்பதற்காக ஒன்றுபடுவோம்
(பங்களாதேஷ் சர்வதேச இஸ்லாமிய பல்கலை கழகத்திலிருந்து MOHAMED SAFRAN – அக்குரணை)
இன்று எமது நாட்டில் முஸ்லிம் சமுகத்துக்கு எதிராக பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக அண்மைக் காலமாக பதுளை நகரில் முஸ்லிம் வியாபாரிகள் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதிகள் (ஹலால் பொறிக்கப்பட்ட உணவுப்பொருட்களுக்கு எதிரான பிரச்சாரம், முஸ்லிம் வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்குவதற்காண தடை, பௌத்த சின்னம் பொறிக்கப்பட்ட கையுரை புரளி), முஸ்லிம்களை சண்டைக்கு இழுக்கும் முயற்சிகள் (23/11/2012 அன்று ஜும்மா தொழுகையின் பின் ஒருவர் தாக்கப்பட்டமை, முச்சக்கர வண்டி ஒன்று நாசமாக்கப்பட்டமை) என்பவற்றை குறிப்பிடலாம்.
இவர்களது நோக்கம் பௌத்த இளைஞர்கள் மனதிலும், சாதாரன மக்கள் மனதிலும் முஸ்லிம்கள் பற்றி தப்பெண்ணங்களை பதியச் செய்தல் ஆகும். இவர்களால் 23/11/2012 அன்று நடாத்தப்பட்ட ஆர்பாட்டம் இதற்கு சான்று பகர்கின்றது.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது எமது எதிர்காலம் பல சவால்களை முன்னோக்கியுள்ளது என்பது தெளிவாகின்றது. இச் சவால்களை முறி யடிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உடனடியாக கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று பட வேண்டியது காலத்தின் தேவை.
இதன் அடிப்படையில் முஸ்லிம் கவுன்சிலும் (MCSL) அதன் தலைவரும் (N.M.N. அமீன்) முன்ணெடுத்துள்ள செயற்பாடுகள் (பௌத்த மகா நாயக்க தேரர்களையும் அரசியல் கட்சி பிரதி நிதிகளையும் சந்தித்து தெளிவு படுத்த உள்ளமை) பாராட்டத்தக்கது.
இச்சந்தர்ப்பத்தில் எமது சமூகத்திலுள்ள அரசியல் தலைமைகள் மற்றும் தஃவா அமைப்புக்கள் கருத்து வேறுபாடுகளையும் விரோதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டியது அடிப்படை தேவை ஆகும். இதுவல்லாமல் காலம் கடந்து ஞானம் பிறப்பதால் பயனில்லை.
neenka enna amaippaha irunthalum sari....inavaatham enra pirachchanai varumpothavathu onru serunkappa.....appa than allah namakku thunai purivan.....
ReplyDelete